districts

img

போராட்டக் களமாக மாறிய ஆட்சியரகங்கள் அங்கன்வாடி ஊழியர்கள் ஆவேசம்

திருப்பூர், பிப். 23 -

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் போராட் டக் களமாக மாறியது. மறைந்த தமிழக முன்னாள் முதல் வர் ஜெயலலிதா, அங்கன்வாடி ஊழி யர் சங்கத்தின் நீண்ட நெடிய போராட் டத்திற்கு பின் சட்டமன்றத்தில் சிறப்பு விதி 110ன் கீழ் அங்கன்வாடி பணியா ளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்பு தற்போது வரை நிறை வேற்றப்படவில்லை. புதுச்சேரி யூனி யன் பிரதேசத்தில் அங்கன்வாடி ஊழி யர்களை அரசு ஊழியராக்கியுள்ளனர். அதேபோல், தமிழகத்திலும் அரசு ஊழி யராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத் தினர் செவ்வாயன்று இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்லம்மாள், மாவட்டத் துணைத் தலைவர் கஸ்தூரி, மாநிலத் துணைத் தலைவர் பாக்கியம், சிஐடியு மாவட்டப் பொருளாளர் டி.குமார், சாலையோர வியாபாரிகள் சங்க செய லாளர் பி.பாலன் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம் உள் ளிட்ட 500க்கும் மேற்பட்ட ஊழியர் கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங் கத்தின் மாவட்ட தலைவர் சாந்தி தலை மையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அலமேலு மங்கை, பொருளாளர் ஸ்டெல்லா உள் ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்புப் போராட்டத்திற்கு அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சி.கவிதா தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எம்.லில்லிபுஷ் பம், மாவட்டப் பொருளாளர் எம்.ஈஸ் வரி, ஏ.தெய்வானை, எஸ்.முருகம் மாள், எஸ்.ராஜம்மாள், டி.சுமதி, என். தெய்வானை, சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.நாகராசன், மாநிலக்குழு உறுப்பினர் சி.அங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற காத்தி ருப்புப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலை வர் சரோஜா, சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.உதயகுமார், மனோன்மணி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உத வியாளர்கள் கலந்து கொண்டனர்.

சமையல் வேலை

திருப்பூரில் இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்து அங் கேயே சமையல் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலும், அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், உதவி யாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தா மல் வியர்வையில் நனைந்தபடி தரையில் அமர்ந்து இப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, கொடுமையான வெயில் தாங்காமல் நிர்வாகி ஒருவர் உள்பட இரண்டு பேர் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.