districts

img

ஒருவாரம் ஆகியும் தண்ணீர் வரவில்லை ரங்கநாதபுரத்தில் சிபிஎம் போராட்டம்

திருப்பூர், டிச.10- திருப்பூர் மாவட்டம், ரங்கநாதபுரத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை சரிசெய் யக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதிப் பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது வார்டுக்குட்பட்ட ரங்கநாதபுரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆழ் குழாய் தண்ணீர் பொதுக் குழாயில் வரவில்லை.

ஆகவே, பழுதாகி யுள்ள மின் மோட்டாரை சரிசெய்ய வேண் டும். மழைக்காலத்தில் வீடுகளுக்குள் சாக் கடை நீரும் புகுந்து விடுவதைத் தடுக்க, சாக்கடைக் கால்வாயை தரமாகக் கட்ட வேண்டும். பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட தெருக்கள் மண்மேடுக ளாகியிருப்பதை சீரமைத்து உடனே தார் சாலைகளாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் அப் பகுதிப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற குழாய் ஆய்வாளர் சுகுமார், மாந கராட்சி உதவிப் பொறியாளர் சுரேஷ், மாந கராட்சி சுகாதாரக் கண்காணிப்பாளர் யுவ ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி. சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பி னர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பி னர் லட்சுமி, கிளைச் செயலாளர்கள் செல்வகுமார், மாதர் சங்க நிர்வாகி கௌசல்யா மற்றும் பொதுமக்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மதியத்திற்குள் மாற்று மோட்டார் பொருத்தி, தண்ணீர் வழங்கப்படும் என வும், மேற்கண்ட கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;