திருப்பூர், நவ. 29 - திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையங்களை உருவாக்கி பேருந்து கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தி பயணிகளை சிரமப்படுத்தும் போக்குவரத்துக் கழகத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. அத்துடன் கட்டணத் தைக் குறைத்து, பயணிகள் வசதியை அதிகரிக்கவும் மாநில போக்குவரத்து ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் சனி யன்று மாநில போக்குவரத்து ஆணை யருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட கட்டுமான பணிகள் நடைபெறுவ தால், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் வெளியூர் பேருந்துகள் தற்காலிக மாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள் ளன. அதன்படி தேனி, மதுரை, ராமேஸ் வரம், பரமக்குடி, திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட வழித்தடப் பேருந்துகள் தாராபுரம் சாலை கோவில்வழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக் கப்பட்டு வருகின்றன.
அதிக கட்டண வசூல்
கோவில்வழியில் இருந்து இயக்கப் படும் பேருந்துகளுக்கு கட்டண விகி தங்களை அதிகரித்து போக்குவ ரத்துக் கழக நிர்வாகம் மாற்றி அமைத் துள்ளது. இங்கிருந்து மதுரை ஆரப் பாளையம் செல்லும் வழித்தடத்திற்கு ரூ.145 என கட்டணம் நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதை விட அதிக தூரத்தில் (சுமார் 15 கி. மீட்டர்) உள்ள திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே மதுரை ஆரப் பாளையத்துக்கு ரூ.155 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற் போது திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து ஆரப்பாளையம் செல் வதற்கு ரூ.161 என கட்டணம் அதி கரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட வழித்தட அனைத்து பேருந்துகளும் கோவில்வழி பேருந்து நிலையத்துடன் தனது வழித்தடத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், யுனிவர்செல் தியேட்டர் பேருந்து நிலையத்திற்கும் இயக்கப் பட்டும் வருகிறது. இதற்கும் ஏற்கெ னவே இருந்த கட்டணத்தை அதிகரித் துள்ளனர். அத்துடன் புதிய பேருந்து நிலையம் வரும் வெளியூர் பேருந்து களிலும் ரூ.6 கூடுதலாக வசூலிக்கப் படுகிறது.
பயணிகளுக்கு சுமை
காங்கேயம் வழியாக வரும் புற நகரப் பேருந்துகள் காவல்துறை உத்தர வின்படி நகருக்குள் வராமல், கூலி பாளையம் நால்ரோடு, நெருப்பெரிச் சல் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்கிறது. அந்த பேருந்துகளில் வரும் பயணிகள், பழைய பேருந்து நிலை யம் செல்வதற்கு, நல்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே இறக்கி விடப் படுகின்றனர். அவர்களுக்கு அங் கிருந்து நகரின் மையப் பகுதிக்கு செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். நல்லூரில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு நகரப் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.6. ஆனால் நல்லூர் பேருந்து நிறுத்தத்திற்கு சில அடி தூரம் முன்பாக காங்கேயம் வழித்தட பேருந்துகளில் வந்து இறங்கும் பயணிகள் பழைய பேருந்து நிலை யத்திற்கு செல்வதற்கு நகரப் பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. அவ்வழியாக வரும் நகரப் பேருந்து களில் பயணம் செய்தால் அதற்கு முந் தைய ஸ்டேஜ் விஜயாபுரத்திற்கு வசூ லிக்கும் கூடுதல் கட்டணம் பெறப்படு கிறது. மேலும், வெளியூர் பேருந்து களில் இருந்து பயணிகள் இறங்கும் இடத்தில் நகரப் பேருந்துகளை நிறுத்தி அவர்களை ஏற்றி வர அதிகாரிகள் எவ் வித வசதியும் செய்து தரவில்லை. இத னால் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் சுமைகளைச் சுமந்து கொண்டு நடந்து சென்று நல்லூர் வந்து பேருந்து களில் ஏறும் நிலை உள்ளது. இது அவ் வழியாக வரும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தையும், மன உளைச்சலையும் உண்டாக்குகிறது. பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கோவை வழித்தட பேருந் துகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இயக்கப்படு கிறது. திருப்பூர் நகர மக்கள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல எவ்வித நேரடி பேருந்து வசதியும் இல்லை. அவர்கள் கால் டாக்சி, ஆட்டோ ஆகியவற்றை நம்பிப் பய ணிக்கும் அவல நிலைமை உள்ளது. எனவே திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வரை செல்ல நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தற் காலிக பேருந்து நிலையங்களில் கழிப் பறை, பயணிகள் அமருமிடம், இருக் கைகள், சுகாதாரமான குடிநீர் உள் ளிட்ட பயணிகளுக்கும், போக்கு வரத்து ஊழியர்களுக்கும் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை.
கிராமப்புற பேருந்துகள்
கொரோனா காலத்திற்கு முன்பு திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிரா மப்புறங்களுக்கு இயக்கப்பட்ட நகர, புறநகரப் பேருந்துகள் முழுவ தும், தற்போது முழுமையாக இயக்கப் படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற் போது கொரோனா முடக்கம் தளர்த் தப்பட்டு தொழில், வர்த்தக நிறுவனங் கள், விவசாய நடவடிக்கைகள் முழுமை யாக செயல்படத் தொடங்கியிருக் கிறது. அத்துடன் கிராமப்புற மக்களின் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளுக்கும் பேருந்து வசதி கட்டாயத் தேவை யாக உள்ளது. இந்த நிலையில் கிரா மப்புற பேருந்து சேவையை கொரோ னாவுக்கு முந்தைய நிலையைப் போல் மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவும், நிறுத்தங்களை ஏற்ப டுத்தவும், நியாயமான கட்டணம் நிர் ணயிக்கவும் வேண்டிய போக்கு வரத்துக் கழக அதிகாரிகளின் நடவ டிக்கை, அதற்கு மாறாக லாபத்தை மட் டும் நோக்கமாகக் கொண்டு, மக்க ளையும், போக்குவரத்து ஊழியர்களை யும் அலட்சியப்படுத்தி சிரமப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நியாயமற்ற கட்டண உயர்வு குறித்து ஏற்கெனவே தஞ்சை மண்டல மேலாளர் மற்றும் காரைக்குடி வணிக மேலாளர் ஆகி யோரின் கவனத்துக்கு புகார் அனுப்பப் பட்டது. ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே மேற்கண்ட பிரச்சனைகளில் மாநில போக்குவரத்து ஆணையர் நேரடி கவனம் செலுத்தி கூடுதல் கட் டணத்தை குறைக்கவும், பயணிக ளுக்குத் தேவையான பேருந்து, நிறுத் தம், அடிப்படை வசதிகளை நிறை வேற்றவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் திருப்பூர் மாவட்ட மக் கள் தொகை மற்றும் தொழில் வளர்ச் சிக்கு ஏற்ப மாநில அரசு கூடுதல் பேருந் துகளை வழங்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு சார்பில் செ.முத்துக் கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.