திருப்பூர், மார்ச் 15-
பாஜக, அதிமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை சாதி, மத, இன அடிப்படையில் பிரிக்கக்கூ டிய பாரதிய ஜனதாவின் சாகச அரசி யலை திமுக கூட்டணி முறியடித்து வெற்றி பெறும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பின ருமான கே.சுப்பராயன் திருப்பூரில் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, இடதுசாரி கட்சிகள் பல நெருக்கடிகளுக்கு இடையி லும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழி நடத்தப்படும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணியை முறியடிப்பதற்காக, அரசியல் வெற்றி பெற வேண்டும் என திமுக அணியில்்்் இடம் பெற்று உள்ளோம். எங்களுக்கு சில இழப்பு கள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு, கொள்கை அடிப்படை யில் பாஜக அதிமுக கூட்டணியை முறியடிப்போம். எங்களுக்கு அந்த அரசியல் வெற்றிதான் முக்கி யம். மத்திய அரசு, மாநில அரசின் உளவுத்துறைகளும், பல ஊடகங்க ளும், பத்திரிகைகளும் திமுக அணி யின் வெற்றியை உறுதிப்படுத்தி யுள்ளன.
இந்த நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மௌனம் சில சந்தேகங் களை ஏற்படுத்துகிறது. அந்தக் கட்சி அரசியல் சாகசத்தில், அரசியல் திருட்டு தனத்தில் ஈடுபட்டிருக்கி றது. பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிரான ஓட்டுகளை சாதி மத இன அடையாளங்களை பயன்படுத்தி பிளவுபடுத்தும் அரசியல் உத்தியை அது மேற்கொண்டுள்ளது. அந்த உத்தியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முறியடிக்கும். 200க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அணி வெற்றி பெறுவது நிச்சயம். 20 இடங்களில் போட்டியிடும் பாஜக பல இடங்க ளில் டெபாசிட் வாங்குவது கூட சந் தேகம். அந்த கூட்டணியை முறிய டிப்பது ஒவ்வொரு தேச பக்தரின் கட மையாகும்.
திருப்பூரில் நேற்று (திங்களன்று) நூல் விலை உயர்வை கண்டித்து தொழில்துறையினர் வேலை நிறுத் தம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூல் விலை அபரிமி தமாக உயர்வதற்கு என்ன காரணம் என்று மோடி அரசு பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பாடுபடும் அரசு. அந்த அரசு சிறு குறு தொழில்களை காப் பாற்றாது. கடந்த இரண்டு வருடத் தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்துள்ளது. ஆனால் விவசா யிகளின் பயிர்க் கடனை ரத்து செய்ய மறுக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021 வரை சிறு குறு நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்ட எண்ணிக்கை விப ரத்தை வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். அதற்கு மோடி அரசு தயாரா?.
மோடி அரசை வீழ்த்துவது இந்தியர் ஒவ்வொருவரின் கடமையாகும்
நூல் விலையைப்பொறுத்த வரை உள்நாட்டு தேவையை புறக் கணித்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஏன் அனுமதி கொடுத் தது?. பாஜக அரசுக்கு சிறு குறு தொழில்துறையினர் பற்றி அக்கறை இல்லை. நூல் விலையை குறைக்க உள்நாட்டு தேவை மதிப்பீடு செய்து அதை மத்திய அரசே கொள்முதல் செய்து நியாயமான விலை நிர்ண யித்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு அமைச்சர்களுக்கு இருமுறை கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், பதில் இல்லை.
திருப்பூர் வடக்கு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளருக்கும், தெற்கில் திமுக வேட் பாளருக்கும், இந்த மாவட்டத்தில் மற்ற ஆறு தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக் கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பராயன் கூறினார்.
இந்த சந்திப்பின்போது திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூ னிஸ்ட் வேட்பாளர் எம்.ரவி மற்றும் கட்சி நிர்வாகி பி.ஆர். நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.