செவ்வாய், ஜனவரி 26, 2021

districts

img

பால் கொள்முதல் சீட்டு உடனடியாக வழங்குக விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், நவ. 27- திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஆரம்ப கூட்டுறவு சங்கங்களில் இருந்து துணை குளிரூட்டு நிலை யங்கள் கொள்முதல் செய்யும் பாலின் அளவு, தரம் பதிவு செய்த சீட்டுகளை உடனடியாக விவசா யிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி கள் குறை தீர்ப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் வெள்ளி யன்று நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் இருந்து விவசாயிகள் பங் கேற்று காணொலி வாயிலாக தங் கள் குறைகளைத் தெரிவித்தனர்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் பேசியதாவது: கிராமப்புறங்களில் பால் உற் பத்தியாளர்களிடம் இருந்து ஆரம்ப கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் பாலின் தரம் மற்றும் அளவு குறித்து சீட் டுகளை துணை குளிரூட்டும் நிலை யங்கள் உடனடியாக வழங்குவ தில்லை. இது பல முறைகேடுக ளுக்கு வழிவகுத்து விவசாயி களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பால் கொள்முதல் செய்யும் விவசாயிகளின் அந்தந்த சங்கங் களுக்கு பால் அளவு, தரம் பற்றிய சீட்டுகளை தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து சங்கங்களிலும் தானி யங்கி பரிசோதனை கருவிகளை நிறுவி உடனுக்குடன் பரிசோ தனை சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உயர்மின் கோபுர இழப்பீடு

திருப்பூர் மாவட்டத்தில் ஏற் கெனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுவிட்ட விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை பல பகுதிகளில் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த இழப் பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் புதி தாக உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு கூடுதலாக 33 சத விகித இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டபடி இன்னும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே கூடுதல் இழப் பீடு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரங்களில் ஈரி யோபைட் என்னும் சிலந்தி தாக்கு தல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுப்பதுடன், தாக்குத லுக்கு உள்ளான தென்னை மரங்க ளுக்கு இழப்பீடு பெற வட்டார விரிவாக்க அலுவலகங்களி லேயே பதிவு செய்யலாம் என மாற்ற வேண்டும்.

அதேபோல் படைப்புழுத் தாக்குதலைக் கட் டுப்படுத்த அந்தந்த வட்டாரத்தில் எவ்வளவு ஹெக்டேர் பரப்பளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று  கணக்கெடுத்து, அதற்கு உரிய அளவு படைப்புழு மருந்து விவசா யிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், குடிமங்கலம் பகுதியில் போலி விதைகளால் மகசூல் பாதிக் கப்பட்டுள்ள காய்கறி விவசாயிக ளுக்கு இழப்பீடு வழங்குவதுடன், கடைகளில் போலி விதை விற் பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஊத்துக்குளி வட்டம் புஞ்சை தளவாய்பாளையத்துக்கு ஏற் கெனவே இயக்கப்பட்ட 8 பி, சி 14 வழித்தட புறநகரப் பேருந்துகளை கொரோனா காலத்தில் நிறுத்தி விட்டனர்.

இந்த கிராமத்தில் இருந்து ஊத்துக்குளி 7 கி.மீ., விஜ யமங்கலம் 8 கி.மீ., சென்னிமலை 14 கி.மீ., தூரத்தில் உள்ளது. பு.தளவாய்பாளையம் கிரா மத்தை மையப்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள், மக்கள் அன்றாட வேலை மற்றும் மருத்துவம னைக்கு வர சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் 8 பி, சி 14 பேருந்து களை உடனடியாக இயக்க வேண் டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

போத்தம்பாளையத்தில் குட்டை  

இதேபோல், விவசாய சங்கத் தின் மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.வெங்கடாசலம் பேசுகை யில், அவிநாசி ஒன்றியத்திற்குட் பட்ட போத்தபாளையம் ஊராட்சி பகுதியில் சுமார் 300க்கும் மேற் பட்ட விவசாயிகள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில், க/எண் 320/1 என்ற பூமியில் நிபந்தனை பட்டா பூமியாக உள்ளது. இந்த பூமியானது கடந்த 30 வருடங்க ளுக்கு மேலாக தரிசு நிலமாகவே இருந்து வருகின்றது.

இந்த நிலத் தில் குட்டை அமைத்துத் தந்தால் கிணற்றின் நீர் மட்டம் உயரும். இந்த நில நிபந்தனை பட்டாவை ரத்து செய்து புதிய குட்டை அமைத்து தர வேண்டும் என  கோரிக்கை விடுத்தார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சர வணமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் வேளாண் நேர்முக உதவியாளர் மகாதேவன் உள்பட அதிகாரிகள் பங்கேற்ற னர்.

;