districts

கொரோனா தொற்றுக்குப் பின் திருப்பூரில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு

திருப்பூர், நவ. 29- கொரோனா தொற்றுக்குப் பின் திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளதாக சைல்டு லைன் நிறுவனம் தெரிவித்துள் ளது திருப்பூர் மாவட்டத்தில், குழந் தைகள் தினத்தையொட்டி நவம் பர் 13 முதல் 19 ஆம் தேதி வரையில் 1098 சைல்டு லைன் நண்பர்கள் வாரம் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியாளர் ளர்கள் சந்திப்பு திருப்பூர் அவி நாசி சாலையில் உள்ள சைல்டு லைன் அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது.

இதில், பங்கேற்ற சைல்டு லைன் கூட்டு நிறுவன மான சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் செயல் இயக்குநர் சி.நம்பி செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையில் 11 மாதங்களில் குழந்தைத் திரு மணம் தொடர்பாக 90 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதில், 50 சதவிகித குழந்தைத் திரும ணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளன. மேலும், மீதமுள்ள திரும ணமான பெண் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். ஆனால் வெளியில் தெரியாமல் இதைவிட 2 முதல் 3 மடங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்குப்பின்னர் இத்தகைய சம்பவங்கள் அதிக ரித்துள்ளது. அதேபோல், வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்படும் 18 வயதுக்கும் குறைவான பெண்கள் நூற்பாலைகளிலும், தொழில் நிறுவனங்களில் விடுதிகளிலும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அண்மையில் சேவூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் உள்ள தனியார் நூற்பாலையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 140 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு ஆட்சி யர் அனுமதியுடன் சொந்த ஊர் களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நூற்பாலைகள், தொழிற்சாலைகளில் உள்ள விடு திகளில் தங்கியிருக்கும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

இதன் மூலமாக மாதம் ஒரு முறை விடுதிகளில் ஆய்வு செய்து குழந்தைகள் பணிக்குச் செல்வதைத் தடுக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தில், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண் டுகளாகவே அதிகரித்து வருகி றது. இதற்கு முக்கியக் காரணம் குடும்ப சூழ்நிலை, வறுமை போன்றவையாகும். ஆகவே கொரோனா நோய்த் தொற்றுக் குப் பின்னர் பள்ளிகள் திறக்கும் போது எத்தனை குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட் டுள்ளனர் என்பது குறித்த கணக் கெடுப்பையும் மாவட்ட நிர்வா கம் நடத்த வேண்டும் என தெரி வித்தார். இந்த சந்திப்பின்போது சைல்டு லைன் மைய ஒருங்கி ணைப்பாளர் எஸ்.கதிர்வேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.தினேஷ்பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.