திருப்பூர், ஜூன் 11-
திருப்பூரில் பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பின்னலாடை ஏற்றுமதி ஆலை களை முழுமையாக திறந்து இயக்கு வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்மு கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள் ளது. தமிழகத்தில் கொரோனா தொற் றுப் பரவல் அதிகமுள்ள மாவட் டங்களில் நான்காவது இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. சராசரி யாக ஆயிரம் பேர் வரை ஒரு நாளைக்கு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி இறப்பு எண் ணிக்கையும் 10 பேருக்கும் அதிக மாக உள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டன. எனினும், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்க ளில் 10 சதவிகித பணியாளர்களு டன் ஏற்றுமதி நிறுவனங்களை மாதிரி ஆடைகள் தயாரிப்புக்கு இயக்கலாம் என்று அரசு அனுமதி வழங்கியது. 10 சதவிகிதம் இயக் கலாம் என்பதை வாய்ப்பாக பயன் படுத்தி பெரும்பாலான பெரிய ஏற்று மதி நிறுவனங்கள் தங்கள் இஷ் டத்துக்கு ஆட்களை வரவழைத்து ஆலைகளை இயக்கத் தொடங்கி விட்டனர். அதேசமயம் அரசின் அனுமதியும், ஏற்றுமதி நிறுவனங் கள் கட்டாயப்படுத்தி தொழிலா ளர்களை வரவழைத்ததும் திருப்பூர் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது.
முழு ஊரடங்கை கூடுதலாக ஒரு வார காலத்துக்குத் தொடர வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வற்புறுத்தினர். 10 சதவிகிதம் பணியாளர்களுடன் ஏற்றுமதி ஆலைகளை இயக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பியது. கடந்த 7ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக திருப்பூரில் ஏற்றுமதி ஆலைகள் நடந்து கொள்ளும் விதம் மார்க்சிஸ்ட் கட்சியும், தொழிற்சங் கங்களும் முன்வைத்த கோரிக்கை கள் மிகவும் சரியானது என்று மெய்ப் பிக்கும் விதத்தில் உள்ளது. திருப்பூ ரின் முன்னணி ஏற்றுமதி நிறுவன மான ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 10 சதவிகிதத்துக்கு மாறாக, ஏறத்தாழ முழு அளவு தொழிலாளர்களை கொண்டு அதன் கிளை நிறுவனங் களை இயக்கியுள்ளது. கட்டாயப் படுத்தி தொழிலாளர்களை வர வழைத்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர் ஒருவர் இதை தெரிவித்தார்.
அதே போல் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆலையி லும் மூன்று பேருந்துகளில் ஆட் களை அழைத்து வந்து வேலை வாங் கினர். இது போல் மிகப்பெரிய, முன் னணி ஏற்றுமதி நிறுவனங்கள் அர சின் 10 சதவிகித அறிவிப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு தங்கள் இஷ் டத்துக்கு கூடுதல் தொழிலாளர் களை வரவழைத்து ஆலைகளை இயக்கினர். 10 சதவிகித விதியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறி விப்பு வெறும் கண் துடைப்பு நடவ டிக்கையாகவே இருந்தது. ஒரு சில நிறுவனங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஓரிரு நிறுவனங்கள் சீல் வைக் கப்பட்டதாக பெரிய அளவுக்கு ஊட கங்களில் பிரபலம் செய்யப்பட்டது. ஆனால் முக்கியமான பல பெரிய நிறுவனங்களிடம் அரசின் அறி விப்பு செல்லாத காசு போலத் தான் இருந்தது. குறைந்தபட்சம் 30 முதல் 70, 80 சதம் தொழிலாளர்களை கொண்டு ஏற்றுமதி ஆலைகள் இயக்கப்பட்டன. இவ்வாறு மக்க ளின் அதிருப்தியையும், அரசின் அறிவிப்பையும் பொருட்படுத்தா மல் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்று மதி ஆலைகளை இயக்கிவிட்டு, தற் போது முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண் முகம் வியாழனன்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத் தில் போதுமான அளவு தொழி லாளர்களுடன் ஏற்றுமதி ஆலை களை இயக்க அனுமதிக்க வேண் டும் என்று கூறியுள்ளார். அத்து டன் தடுப்பூசி பற்றாக்குறை நிலவு வதால் இஎஸ்ஐ மூலம் பெரும்பா லான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், இது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்குமா றும் மாநில அரசுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ராஜா எம்.சண் முகம். மே 14ஆம் தேதி இந்த வார ஊர டங்கு முடிவடையும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோ சனை நடத்த உள்ள நிலையில் ஏற்று மதியாளர் சங்கம் கோரிக்கை விடுத் திருக்கிறது. எனினும் அரசு இவர் களது குறுகிய நோக்கத்திலான கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், கொரோனா தொற்று பரவலை கட் டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்த வும் முன்னுரிமை அளிக்க வேண் டும். அதன் பிறகே முழு அளவு ஆலைகளை இயக்குவதற்கு அனு மதி அளிப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று திருப்பூர் மக்கள் ஒருமனதாக வலியுறுத்துகின்றனர்.