அவிநாசி, நவ.27- சேவூர் அருகே பெரியகானூரில் மகளுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த தந்தையை காவல் துறை யினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே பெரிய கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (39). இவ ருக்கு மனைவி, 16 வயது மகள், 14 வயது மகன் ஆகியோர் உள்ளனர். மகன் உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில், சந்திரன் மது அருந்தி வந்து, அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்த தாகக் கூறப்படுகிறது.
இதனால், மனைவி, மகள் இருவரும் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று இரவு பாட்டி வீட்டில் இருந்த மகளை மட்டும் சந்திரன் வீட்டிற்கு அழைத்து வந்து, பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதையடுத்து மகள் தந்தையிடம் இருந்து தப்பித்து வந்து தாயிடம் நடந்ததை தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழனன்று இரவு வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்த னர்.