districts

ரூ14 72 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஏப்.16- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.14.72 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடை பெற்று வருகிறது. அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வியாழன்று நடை பெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 706 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

இதில், ஆர்.சி.எச்.பி.டி ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6500 முதல் ரூ.7600 வரையிலும் டி.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9930 வரை யிலும், கொட்டுரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ1500 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. வியாழனன்று  நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 72 ஆயி ரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.  இந்த ஏலத்தில் பருத்தி விவசாயிகள் 140 பேரும், பருத்தி  வியாபாரிகள் 47 பேரும் ஏலத்தில் பங்கேற்றனர். சென்ற வாரத்தை விட, பருத்தி வரத்து இந்த முறை அதிகரித்துள் ளது. மேலும், டி.சி.எச்.ரகப்பருத்தி விலையும் அதிகரித்த தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.