திருப்பூர், டிச. 31- மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட் டத்தில் 10 மையங்களில் சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பு புதனன்று மாலை சிஐ டியு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன் வாடி சங்க நகரக் கமிட்டி துணைச் செயலாளர் திவ்யா தலைமையில் ஒன்றியத் தலைவர் சுசீலா, நகரத் துணைத் தலைவர் மகேஸ்வரி, சிஐ டியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் காலனியில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பஞ் சாலைத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சி.ஈஸ்வர மூர்த்தி தலைமை வகித்தார். இதில், சிஐடியு பாத்திர சங்கச் செயலாளர் குப்புசாமி, சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிச்சம்பாளையம் புதூரில் சிஐ டியு பனியன் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர்.
பாண்டியன் நகரில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தினர் நடத்திய விவசாயிகள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி. குமார் தலைமை வகித்துப் பேசி னார். திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி பணிமனை முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கப் பொது செயலாளர் செல்ல துரை, சிஐடியு சாலையோர வியாபா ரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் ஆகியோர் உரையாற்றினர்.
இடுவாய் கிராமத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்க செய லாளர் என்.சுப்பிரமணியம் பங் கேற்று உரையாற்றினார். இத்து டன் பல்லகவுண்டம்பாளையத்தில் சிஐடியு இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத் தில் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. கந்தசாமி விவசாயிகள் போராட் டத்தை ஆதரித்துப் பேசினார். இத்துடன் அவிநாசி, தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளிலும் விவ சாயிகளுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் ஐநூறுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.