வியாழன், ஜனவரி 28, 2021

districts

img

பனியன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, டிச.31- புதிய சம்பள ஒப்பந்தம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகைளை வலியுறுத்தி புதனன்று அவிநாசியில் பனியன் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர்  மாவட்டத்தில் பனியன் தொழி லாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் காலா வதியாகி ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில், புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்காமல் பனியன் உற்பத்தியாளர்கள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்தும், சம்பளப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலி யுறுத்தி அவிநாசி புதிய பேருந்து நிலையத் தில்  அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிஐடியு சார்பில் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி கே.எம். இசாக், ஐஎன்டியுசி சிவசாமி, எம்எல்எப்  பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;