districts

img

அவிநாசி: வளர்ச்சித் திட்டப் பணிகளை சபாநாயகர் துவக்கி வைப்பு

அவிநாசி, நவ.29- அவிநாசியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் திடலில் ரூ.1.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஞாயிறன்று சபாநாயகர் பி.தனபால் பயனாளிகளுக்கு வழங்கினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி  ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், பிரதம மந்திரி சாலை திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகிய திட்டத்தின் கீழ் 941.60 லட்சம் மதிப்பீட்டிலான 22 திட்டப் பணிகளை சபாநாயகர் பி.தனபால் துவங்கி வைத் தார்.

 இதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 72 ,900 மதிப்பி லான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக் கள், 26 பயனாளிகளுக்கு ரூ.3,12,000 மதிப் பிலான முதியோர் உதவித்தொகை, 12 பய னாளிகளுக்கு ரூ.1,44,000 மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, 14 பய னாளிகளுக்கு ரூ.1,68,000 மதிப்பிலான விதவை உதவித் தொகையும், 10 பயனாளிகளுக்கு பல் வேறு வகையான சான்றிதழ்களும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 11 பய னாளிகளுக்கு ரூ.37,500 மதிப்பிலான கல்வி உதவித் தொகையும், மூன்று பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பில் இயற்கை நிவாரண உதவித் தொகையும், 35 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத் தொகை உள்ளிட்ட 335 பயனயாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்.  இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜெகதீசன், சேவூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;