districts

img

அன்னதானக்கூடம் திறப்பு விழா காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

அவிநாசி, டிச.7- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில்  புதிதாக கட்டப்பட்ட அன்னதானக் கூடம் திறப்பு விழாவில் தனிமனித இடைவெ ளியின்றி ஏராளமானோர் கூடியதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகாமையில் அவி நாசி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில் சுமார் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திங்களன்று காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கொரோனா நோய்த்தொற்று பரவல், தனிமனித இடைவெளி ஆகிய வற்றை பின்பற்றாமல் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். இதைய டுத்து அவிநாசிலிங்கேஸ்வரர் செயல் அலுவலர் லோகநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இணை ஆணையர் செந்தில்வேல், 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி யில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது ஏன் எனக் கேள்வி எழுப்பிய தால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

;