திருப்பூர், டிச.7- டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத் தையொட்டி ஊத்துக்குளியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடை பெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் அம்பேத் கர் நினைவு ரத்ததான முகாம் ஊத்துக்குளி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் க.லெனின், தாலுகாக்குழு உறுப்பினர் கு.பாலமுரளி மற்றும் காங்கேயம் உட் கோட்ட காவல்துறை துணை கண்காணிப் பாளர் ரா.தனராசு, ஊத்துக்குளி காவல் ஆய் வாளர் டி.ஏ.தவமணி, ஊத்துக்குளி பேரூ ராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், ரத்த தான கழக மாவட்ட செயலாளர் துரை சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், புரட்சியாளர் அம்பேத்க ரின் நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அருகில் உள்ள சிலைக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தெற்கு மாநகரத் தலைவர் பி.பாலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் ச.நந்தகோபால், வடக்கு மாநகரத் தலைவர் இ.பி.ஜெயகிருஷ்ணன், சிஐடியு மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் சிவராமன், வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் சஞ்சீவ், வடக்கு மாநகர மாதர் சங்க நிர்வாகி மரிய சிசிலியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.