திருப்பத்தூர், செப். 13- திருப்பத்தூர் அடுத்த காக்கனாம் பாளையம், கூடபட்டு ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைத்து சாதியினருக்கும் பொதுவான சுடுகாடு உள்ளது. கூடப்பட்டு பாம்பாற்றை கடந்து சென்று அங்குள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாம்பாற்றில் தற்போது இடுப்பளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார். அவரது சடலத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல பாம்பாற்றின் நீரில் இறங்கி கரையை கடந்து சென்று உடலை அடக்கம் வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலருக்கும், வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் உடனடியாக எதுவும் செய்ய இயலாத நிலை யில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி சென்று புதைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், காக்னாம்பாளையத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக சுடுகாடு அமைக்கப்பட்டது. பாம்பாற்றை கடந்து சென்றுதான் உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே சுடு காட்டிற்கு செல்ல வசதியாக மேம்பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்