districts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவருக்கு சிறை

திருநெல்வேலி, ஜூன் 17- நெல்லை சந்திப்பு ரயில் நிலை யத்தில் இருந்து முக்கிய நகரங் களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பில் எதிர்புறம் பேசிய நபர், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக தெரிவித்து விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

உடனே மாநகர போலீசார் விரைந்து சென்று ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். இதற்கிடையே மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு, அந்த நபர் யார் என தேடியபோது, அது நெல்லை மாவட்டத்தை காண்பித்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் வண்ணார்பேட்டை குறவஞ்சி நகரைச் சேர்ந்த சிவபெருமாள் (40) என்பது தெரிய வந்தது. அவரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். கைதான சிவபெருமாள் பழைய இரும்பு மற்றும் பொருட்களை சேகரித்து விற்று வந்தார்.

அவரது தந்தை கருப்பசாமி, பழைய இரும்பு  கடை நடத்தி வருகிறார். சிவபெரு மாளுக்கு மது பழக்கம் உள்ளது. மது போதையில் இருந்த அவர், வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.  இதையடுத்து பொது அமை தியை சீர்குலைத்தல், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.