districts

டிபிசி ஊழியர்களுக்கு வேலை செய்த 16 நாட்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை

 திருநெல்வேலி, ஜூன் 4- நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் டிபிசி ஊழியர்களுக்கு மே மாதம் வேலை செய்த 16 நாட்களுக்கு சம்பளம் வழங்கவும் அரசு உத்தரவுப்படி உயர்த்தப் பட்ட ஊதியத்தை வழங்கவும் கோரி மனு கொடுக்கபட்டது.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு திங்கட்கிழமை மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நெல்லை மாவட்டத் தலை வர் ஆர்.மோகன், மாவட்டச் செயலாளர் மாரி யப்பன், மாவட்டப் பொருளாளர் செல்லத் துரை மற்றும் நிர்வாகிகள், டிபிசி தொழி லாளர்கள் திரண்டு வந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

நெல்லை  மாநகராட்சியில் 560க்கும் மேற்பட்ட டிபிசி ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வருகிறார்கள்.மேற்படி ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு, தேங்கி கிடக்கும் கழிவு நீர் அகற்றுதல், மாநகராட்சி வரி வசூல் செய்தல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிப்பது, மாநகராட்சியின் முடிவுகளை பொதுமக்களுக்கு தெரிவித்தல், மேலும் மாநகராட்சியின் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள் மேற்படி தொழிலா ளர்களின் பணி மாநகராட்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. 

இந்நிலையில் 160 டிபிசி  ஊழியர்களுக்கு மே மாதம் 16 நாட்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. டிபிசி ஊழியர்கள் அனை வரும் அனைத்து பணி நாட்களிலும் வேலைக்கு வந்துள்ளனர். அன்றாடம் பணிகளை செய்து உள்ளனர். மாநகராட்சி யின் தினசரி வருகை பதிவேட்டிலும் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.      

பயோமெட்ரிக்கிலும் பதிவு  செய்யப் பட்டுள்ளது. அன்றாட வேலைகள் அனைத் தையும் அனைவரும் செய்துள்ளனர். ஆனால் கடந்த மாதம் சம்பளப் பட்டிய லில் குறிப்பிட்ட 160 தொழிலாளிகளுக்கு 16 நாட்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று கூறுவது தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது .16 நாட்களும் தொழிலாளர்கள் முழுமையாக பணி செய்துள்ளனர். பணி செய்த பின்பும் கூட பணி செய்த நாட்களுக்கு ஊதியம் வழங்க மறுப்பது ஊதியம் வழங்கும் சட்டம் 1936 க்கு விரோதமானதாகும்.  

எனவே பணி செய்த அனைத்து நாட்களுக்கும் முழுமையாக ஊதியம் வழங்க வேண்டுகிறோம், மேலும் 01.04.2023 முதல் டிபிசி ஊழியர்க ளுக்கு தினசரி ஊதியம் ரூ. 480 வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஆனால் மேற்படி உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. மேற்படி செயல் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948க்கு விரோதமானதாகும். 

எனவே மேற்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுக்கு இணங்க குறைந்த பட்ச கூலி சட்டப்படி 01.04.2023 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்தை பாக்கி யுடன் வழங்க வேண்டுகிறோம், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது,

;