districts

கக்கரை, திருமங்கலக்கோட்டையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.8 - குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கா மல் இருக்க மழைநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் குழாய் அமைத்து தர வேண்டும் என  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட  ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.  வாலிபர் சங்கத்தின் ஒரத்தநாடு ஒன்றி யத் தலைவர் கோ.மாஸ்கோ தலைமையில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல்  துரை.ஏசுராஜா, ஒரத்தநாடு ஒன்றியச் செய லாளர் செ.பெர்னாட்ஷா, சோழகன்கரை கிளைத் தலைவர் கோ.சீனிராஜா, மாதவன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்த கோ ரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட கக்கரை மற்றும் திரு மங்கலக்கோட்டை மேற்கு ஆகிய இரு கிரா மங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்க ளுக்கு இடையே செல்லக்கூடிய இணைப்பு சாலையில், தற்போது பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் சுமார் 204.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையானது குடியிருப்பு பகுதி  வழியாக செல்லக்கூடிய அதிக வளைவு களைக் கொண்ட சாலையாகும். இப்பகுதி யில் கடந்த காலங்களில், சாலையின் இருபு றங்களும் மழைநீர் வெளியேறிச் செல்வ தற்கு வடிகால் வாய்க்கால் மற்றும் குழாய் எது வும் அமைத்து சரிவர பராமரிக்காத காரணத் தால், மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகப் பெரிய இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

இச்சூழ்நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மிகப்பெ ரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பல இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதி களை சூழ்ந்து, பல வீடுகள் இடிந்து விழுந்தன.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து வாலிபர் சங்கம் சார்பில்,  ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து கக்கரை மற்றும் திருமங்கலக் கோட்டை மேற்கு ஆகிய இரண்டு கிராமங்க ளுக்கு இடையில் செல்லக் கூடிய, இணைப்பு  சாலையின் இருபுறத்திலும், மழை நீர் வெளி யேறி செல்ல வடிகால் வாய்க்கால் மற்றும்  வடிகால் குழாய் அமைத்து தர கோரிக்கை வைத்தோம். அது சம்பந்தமாக நடவடிக்கை  எடுப்பதாக கூறி இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.  தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதியில் பல இடங்க ளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்தி  மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து தர  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

;