புதுக்கோட்டை, மார்ச் 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் ரூ.70 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. தேர்தல் நிதியை வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் ஆகியோரிடம் வழங்கி னார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம். மகாதீர், செயலாளர் ஆ.குமாரவேல், நகரச் செயலாளர் தீபக், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரக்குழு உறுப்பி னர் எம்.ஏ.ரகுமான் ஆகியோர் உள்ளனர்.