மயிலாடுதுறை, டிச.6 - உலக மண் தினத்தை யொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி பார்வையிட்டு, விவ சாயிகளுக்கு மண் சுகாதார அட்டையை வழங்கினார். வேளாண்மையில் அதிக மகசூல் பெறுவதற்கு பல காரணங்களில் மண் முதன் மையானதும், முக்கியமான தும் ஆகும். பயிர் வளர்ச்சியை பாதிக்கும் கார ணிகளில் மண்ணில் உள்ள சத்துகளின் தன்மை, அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் அளவு, சத்து கள் பயிர்களுக்கு கிடைக் கும் அளவு, களர், உவர் மற்றும் அமிலத்தன்மைகள் முதலியவை முக்கிய பங்க ளிக்கின்றன. மண்ணில் உள்ள பேரூட்ட சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு களை அறிவதற்கும், நுண் ணூட்ட சத்துகளான இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மாங்கனிஸ் சத்துகளின் அளவை அறிவதற்கும் மண் பரிசோதனை மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் மயி லாடுதுறை மாவட்ட ஆட்சிய ரக அலுவலகத்தில் நட மாடும் மண் பரிசோதனை நிலையத்தில், மண் பரிசோ தனை செயல்முறை விளக் கத்தை ஆட்சியர் பார்வை யிட்டார். பின்னர், தங்களது விளைநிலங்களில் மண் பரி சோதனை செய்த விவசாயி களுக்கு மண் சுகாதார அட்டையை வழங்கினார்.