தஞ்சாவூர், மே 29- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரகம் அருகேயுள்ள மாவட்ட வன அலு வலகத்தில் உலக கடல்பசு நாள் விழிப்புணர்வு ஓவி யப் போட்டி செவ் வாயன்று நடை பெற்றது. இதில் 50-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடல் பசு பாது காப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய தலைப்புகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயி ரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன் றாம் பரிசாக ரூ.2 ஆயிரத்தை மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் வழங்கினார். இதில், முதல் பரிசை சென்னை அரும்பாக் கம் அரசுப் பள்ளி மாணவி மு.ஓவியா, இரண் டாம் பரிசுகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. தரணி, லிட்டில் ஸ்காலர்ஸ் பள்ளி மாணவர் தி. சஞ்சீவ், மூன்றாம் பரிசுகளை ப்ளாசம் பப்ளிக் பள்ளி மாணவி வ.ஷ்றாவணி, தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவி சு.ஷிவஸ்ரீ, அ. வீரையா வாண்டையார் நினைவு திரு.புட்பம் கல்லூரி மாணவர்கள் உ.சரண்ராஜ், இ.ரகுணா ஆகியோர் பெற்றனர். மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் வனச் சரக அலுவலர் க.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.