தஞ்சாவூர், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தனியார் பள்ளி கள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சர்மிளா வரவேற்றார். பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி, தென்னை விவசாயிகளை பாராட்டி கௌர வித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேரா வூரணி கிளை முதன்மை மேலாளர் ராம மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். விழாவில், மாணவர்கள் 150-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை பள்ளிக்கு வழங்கினர். இந்த தென்னங்கன்றுகள் அரசுப் பள்ளி வளாகங்களில் நடப்பட உள்ளன. மேலும், மாணவர்களால் தென்னை மரத்தின் உப பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட தொப்பி, கூடை, விசிறி, தேங்காய் சிரட்டை யில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரி யர் பழனிவேல் நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணி பேராவூரணியில் ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம், பேராவூரணி லயன்ஸ் சங்கம், கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் இணைந்து உலக தேங்காய் தின விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை மாலை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். அகில இந்திய தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் பண்ணைவயல் ஆர்.இளங்கோ பேரணியை துவக்கி வைத்துப் பேசினார். பேராவூரணி முடநீக்கியல் மருத்துவ நிபுணர் துரை.நீல கண்டன் தேங்காயின் சிறப்புகள் பற்றி பேசினார். பேரணி, பேராவூரணி பயணியர் மாளிகை யில் தொடங்கி, சேதுசாலை, கடைவீதி, பெரி யார் முதன்மைச் சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.