districts

img

பெண்கள் புகழ்ச்சிக்கோ, இகழ்ச்சிக்கோ இரையாகக்கூடாது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பேச்சு

புதுக்கோட்டை, ஜூலை 13-

       பெண்கள், பெண் குழந்  தைகள் புகழ்ச்சிக்கு மயங் கவோ, இகழ்ச்சிக்குப் பத றவோ கூடாது என்றார் புதுக்  கோட்டை மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா.

       புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம். நேரு யுவக்கேந்திரா, புத்தா  இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாட்டு அறக்கட் டளை, ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய அமைப்புகள் இணைந்து  பெண் குழந்தைகள் வன்  கொடுமைக்கு எதிரான தற்  காப்பு, கலை விழிப்புணர்வு  நிகழ்வை ஸ்ரீவெங்கடேஸ் வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடத்தியது.  

      இந்நிகழ்வில் சிறப்பு  விருந்தினராகக் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா பேசிய தாவது:

     பொதுவாக பெண்கள் தங்களை யாராவது பாது காக்க வேண்டும் என எதிர் பார்க்காமல், நமக்கு நாமே பாதுகாப்பு என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்  டும். பெண்களை ஆண்  களோ, ஆண்களைப் பெண்  களோ அணுகும்போது அவர்கள் முகமலர்ச்சியோடு விருப்பத்தை ஒத்துக் கொள்ளவில்லை என்றாலே  அவர்கள் “நோ” சொல்வதா கவே அர்த்தம்.  

   பொதுவாக பெண் குழந்  தைகள் புகழ்ச்சிக்கு மயங் கவோ, இகழ்ச்சிக்கு பத றவோ கூடாது. அப்படியி ருந்தால்தான் தங்கள் இலட்  சியத்தை அடைவதில் கவ னம் செலுத்தமுடியும். பெண் குழந்தைகள் தங்களுக்கு  சிரமம் என்று உணர்கிற போது  தொடர்கொள்ள வேண்டிய எண். 1098. பெண் குழந்தை களும் ஆண் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நட்பு  பாராட்டி உதவும் கரங்களாக வளர வேண்டும் என்றார்.  

    விழாவிற்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்  டக் கல்வி அலுவலர் (தனி யார் பள்ளிகள்) ஜெயராஜ், நகர்மன்றத் தலைவர் திலக வதிசெந்தில், நேரு யுவ கேந்திரா மாவட்ட அலுவலர் ஜோயல் பிரபாகர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், மாவட்ட குத்துச்  சண்டை கழகத் தலைவர்  எஸ்விஎஸ்.ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.