districts

img

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் பேட்டரி கார்

மயிலாடுதுறை,  மே21-  மயிலாடுதுறை ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. சென்னை, பெங்களூர், மைசூர், கோவை, ராமேஸ்வரம், வாரணாசி என்று தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப் பட்டு வருகிறது. 5 நடை மேடைகளை கொண்ட மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எக்ஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதி இல்லாததால் ரயில் பயணிகள்,முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கோவை, மைசூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் 3,4ஆவது நடைமேடையிலேயே எப்போதும் நிறுத்தப் படுவதால் வயதானவர் கள், நோயாளிகள் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எக்ஸ்கலேட்டர் வசதி செய்துகொடுக்க வேண்டு மென்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அது நிறை வேற்றப்படவில்லை. அதனால் திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இயக்கப்படுவதுபோல் பேட்டரி கார் மயிலாடு துறை ஜங்ஷனில் இயக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். அதனையடுத்து ஒஎன்ஜிசி நிர்வாகம் சார்பில் எம்.பி.ராமலிங்கம் மூலம் ரயில் பயணிகள் பயன் பாட்டிற்கு ஒப்படைக்கப் பட்டது. சேவை சங்கங்கள் மூலம் இயக்கப்படும் என்று அவ்போது தெரிவிக்கப் பட்டது. ஆனால் பேட்டரி கார் கொடுத்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் அந்த கார் இயக்கப்படாமல் அப்படியே காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், பொது மக்கள் பயன்பாட்டிற்காக ஒஎன்ஜிசி நிறுவனம் கும்பகோணம், மயிலாடு துறை ஜங்ஷன்களுக்கு பேட்டரி கார்களை வழங்கியது. மயிலாடுதுறை ஜங்ஷனில் அந்த பேட்டரி கார் இயக்கப்படாமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் இருந்தால் பேட்டரி வீணாகி கார் பழுதாகி விடும். மக்கள் நலனுக் காக ஒஎன்ஜிசி நிறுவனம் வழங்கியதை இயக்குவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று ரயில்வே நிர்வா கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு ஒஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் சேவை நோக்கில் உதவி செய்தாலும் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு போராட வேண்டிய நிலை இருக்கிறது. எனவே சேவை அமைப்புகள் மூலம் ஓட்டுநர் நியமனம் செய்து பேட்டரி காரை இயக்குவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;