districts

img

ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வருமா...?

தஞ்சாவூர், டிச.13 - நீண்ட காலமாக பூட்டியே கிடக்கும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் கோ.மாஸ்கோ, ஒன்றி யச் செயலாளர் செ.பெர்னாட்ஷா  ஆகியோர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், ஒரத்தநாடு சட்ட மன்றத் தொகுதியும் ஒன்றாக உள்ளது. கடந்த  ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தின் 16-வது  சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன்  பிறகு மே  2 ஆம் தேதி அனைத்து தொகுதி களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு, அனைத்து தொகுதிகளிலும் தற்போது  பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த சூழலில் கடந்த 7 மாதங்களாக ஒரத்த நாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எந்த  செயல்பாடும் இன்றி பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தொகுதி மக்க ளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய  முடியாத நிலை உள்ளது. இத்தகைய ஜனநா யக விரோத போக்கை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  எனவே, ஒரத்தநாடு தொகுதி மக்க ளின் அடிப்படை தேவைகளையும், கோரிக் கைகளையும் நிறைவேற்றிட, உடனடியாக ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தை திறந்து செயல்படுத்திட வேண்டும் என  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒரத்த நாடு ஒன்றியம் சார்பில் கேட்டுக் கொள்கி றோம்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக, அதி முகவைச் சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாள ரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்தி லிங்கம் தேர்வு செய்யப்பட்டார் என்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளில் அதிமுக ஒரத்தநாட் டில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் குறிப் பிடத்தக்கது.

;