நாகப்பட்டினம், ஜூலை 4 -\
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி கீழையூர் ஒன்றியம் மேலப் பிடாகையில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டு இதுவரையிலும் போதுமான தண்ணீர் கடைமடை பகுதி யான நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிக்கு வந்து சேரவில்லை.
மேட்டூர் அணையில் நீர் திறப் பதை நம்பி அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடியை துவக்கி விட்டனர். தண்ணீர் திறந்து 15 நாட்கள் ஆகியும் இதுவரையில் போது மான அளவிற்கு தண்ணீர் வந்த பாடில்லை. முறை வைத்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் அதிகப்படியாக திறந்து விட்டால்தான் கடை மடை பகுதியாக இருக்கின்ற கீழ்வேளூர் வட்டாரப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். கீழை யூர் ஒன்றிய பகுதிகளான திருப்பூண்டி, மீனம்பநல்லூர், மடப்புரம், கீழையூர், சோழ வித்யாபுரம், பாலகுறிச்சி, இறையான்குடி, திருக்கு வளை, வாழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாகு படி செய்த பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் சாகுபடி செய்த விவசாயத்திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கீழையூர் மேற்கு ஒன்றி யம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கீழையூர் மேற்கு ஒன்றி யச் செயலாளர் டி.வெங்கட்ரா மன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், விச ஒன்றி யத் தலைவர் கே.கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட் டோர் ஈடுபட்டனர்.
கீழ்வேளூர் வட்டாட்சியர் க.ரமேஷ், திருக்குவளை வட்டாட்சியர் ஜெ.சுதர்சன், வெண் ணாறு பாசன வடிகால் கோட்ட பொறியாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.