மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்துள்ள கேசவன்பாளையம் (சுனாமி குடியிருப்பு) கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு வட்டாச்சியர் ஹரிதரன் தலைமையில் நடைபெற்றது. 71 குடியிருப்புகளுக்கான மனை பட்டாக்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார். வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம பஞ்சாயத்தார்கள், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.