districts

img

நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 4-

    மாணவர்களை பாதிக்கக் கூடிய நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து  செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்துக்  கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலா ளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

   தஞ்சாவூரில், நெக்ஸ்ட் தேர்வை கை விடக் கோரி திங்கள்கிழமை மாலை நடை பெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    ஒன்றிய அரசு நெக்ஸ்ட் என்கிற தகுதித்  தேர்வை மருத்துவப் படிப்பில் திணிக்கிறது.  இத்தகுதித் தேர்வை திணிக்கக் கூடாது என்றும், இத்தேர்வை உடனடியாக ரத்து  செய்ய வேண்டும் எனவும் பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம் மூலம் தெரி வித்துள்ளார். இதை வரவேற்கிறோம். நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை முழுமையாக  ரத்து செய்வதற்கு, தமிழ்நாடு அரசு அடுத்த  கட்டமாக எடுக்கும் அனைத்து முயற்சி களுக்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கமும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்  கள் சங்கமும் உறுதுணையாக இருக்கும்.

   நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வு மாண வர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்  தும். போட்டித் தேர்வையும், தகுதித் தேர் வையும் ஒன்றாக இணைப்பது சரியல்ல. வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு முறை  இல்லை. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டில் தகுதி பெறுவதற்கான தேர்வை மாநில அரசின் மருத்துவப் பல்கலைக்கழகம்தான் நடத்தும்.  

     இந்நிலையில், எம்.பி.பி.எஸ். இறுதி யாண்டில் தேர்ச்சி பெறுவதற்கும், முது நிலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கும், வெளிநாட்டிலிருந்து படித்து வருபவர்  களுக்கும் ஒரே தேர்வு என எல்லாவற்றை யும் ஒன்றாக இணைப்பது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.

    இதனால் சாதாரண ஏழை, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வரமாட்டார்கள். எனவே, இரண்டையும் இணைப்பது சரியல்ல. எனவே இந்த நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

   அப்போது சங்கச் செயலாளர் ஏ.ஆர்.சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;