குடவாசல், டிச.17 - குடவாசல் வடக்கு ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் பல்வேறு அரசி யல் கட்சியில் இருந்து விலகி 8 குடும்பங் களைச் சார்ந்த 25 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு ஆலத்தூர் கிளை செய லாளர் என்.செல்வராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கட்சி யில் இணைந்த 25 பேரை வரவேற்று சால்வை அணிவித்து புதிதாக அமைக்கப்பட்ட கொடி மேடையில் செங் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். நன்னிலம் ஒன்றிய செயலாளர் கே. எம்.லிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் பி. ஸ்டாலின், குடவாசல் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அன்பழகன், பி. சந்திரகாசன், எஸ்.ராஜேந்திரன், வீ. தீனதயாளன் மற்றும் கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.