districts

img

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா

புதுக்கோட்டை, டிச.9-  புதுக்கோட்டை, திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து மாணவர்க ளுக்கான துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல் வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். துளிர் இதழ் பொறுப்பாசிரியர் எஸ். டி.பாலகிருஷ்ணன், நிர்வாக ஆசிரியர் எம்.எஸ்.ஸ்டீவன் நாதன் வாழ்த்துப் பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசும் போது, மாணவர்கள் ஆர்வம் இருக்கின்ற துறையில் கவனம் செலுத்த வேண்டும். துளிர் புத்தகத்தை தொடர்ந்து வாசித்தவர்களில் பலர் பின்னாளில் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற்றுள்ளனர் எனத் தெரி வித்தார். நிகழ்ச்சியில், 51 மாணவ, மாணவிகள் தாங்கள் வாசித்த துளிர் புத்தகத்தின் கருத்துக்க ளை பகிர்ந்து கொண்டனர். மேலும், மாணவர்கள் தங்க ளது ஓவியங்கள் மற்றும் கவி தைகளை துளிர் இதழுக்கு வழங்கினர்.

;