districts

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநர் பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்

அரியலூர், ஆக.7-

    அரியலூர் அருகே கா.அம்பாபூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜ் (28). முனியங்குறிச்சியில் உள்ள  ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சொந்த மான சுண்ணாம்புக் சுரங்கத்தில் லாரி ஓட்டு நராக பணியாற்றி வந்த இவர், ஞாயிற் றுக்கிழமை சுரங்கம் முன்பு லாரியை நிறுத்திய போது, பின்பக்க தானியங்கி கதவு மூடாமல் இருந்துள்ளது.

    இதை சரி செய்வதற்காக ஆனந்த ராஜ், டிப்பரை தூக்கிய போது, மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதால், மின்சா ரம் பாய்ந்து ஆனந்தராஜ் உயிரிழந்தார்.

    இந்நிலையில், ஆனந்தராஜின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கொல்லாபுரம் கிராமத்தி லுள்ள தனியார் சிமெண்ட் ஆலை முன்பு அவரது உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அரியலூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.