districts

திருச்சி முக்கிய செய்திகள்

மரக்கன்றுகள் பெற அழைப்பு  

சீர்காழி, டிச.5 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர்  சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மண்வ ளத்தை காத்திடவும் இயற்கை வளத்தை பெருக்கிடவும், வேளாண் காடுகள் வளர்ப்பு  திட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் பெறலாம். வேளாண்மை துறையின் மூலம் பதிவு செய்து அருகில்  உள்ள அரசு வனத்துறையின் நாற்றாங்கால்களில் இருப்பு  வைத்து, இவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.  அனைத்து விவசாயி களும் பயன்பெறும் பொருட்டு  ஹெக்டேருக்கு 400 கன்றுகள் வரை வழங்கப்படவுள்ளது. வேம்பு, தேக்கு, சந்தனமரம், ஈட்டி மரம், மகாகனி, மலை வேம்பு மற்றும் இதர மரக்கன்றுகள், திடல்கள், வயல் வரப்புகளில் வைப்ப தற்கும் வழங்கப்படுகிறது. மரக் கன்றுகள் தேவைப்படும்  விவசாயிகள் செல்போன் எண், ஆதார், நில விபரம்,  கம்ப்யூட்டர் சிட்டா உள்ளிட்ட  அனைத்து விவரங்களுடன் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் உதவி அலுவலர் கள் மற்றும் அருகில் உள்ள  வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம்  பதிவு செய்து பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இலவச சிறப்பு கண் மருத்துவ முகாம்

பாபநாசம், டிச. 5 - திருக்கருக்காவூர் சோழன் தொடக்கப் பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சாவூர் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச சிறப்பு கண் மருத்துவ முகாமை பாபநாசத்தை அடுத்த திருக்கருக்காவூர் சோழன் தொடக்கப் பள்ளியில் நடத்தின. முகாமில் கோவை சங்கரா  கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், 300-க்கும் மேற்பட்டவர்களிடம் கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 60-க்கும் மேற்பட்ட வர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோவை அழைத்துச் செல்லப் பட்டனர். முன்னதாக முகாமை  பாபநாசம் டிஎஸ்பி பா.பூரணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலு வலர் மணி, பள்ளி நிர்வாகி சிவ.சண்முகம், திமுக மாவட்ட  நிர்வாகி அய்யாராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாந்தோணி அரசுப் பள்ளி  ஆசிரியர் மீது பொய் குற்றச்சாட்டு பொதுமக்கள், பெற்றோர் போராட்டம்

கரூர், டிச.5 - கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் பாகநத்தம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணி புரிபவர் பன்னீர்செல்வம். இவர் பள்ளியில், ‘வளரிளம் பருவம்’  என்ற பாடம் நடத்தும்போது ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தற்காலிக பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது சொந்த வெறுப்பின்  காரணமாக பொய்யான  குற்றச்சாட்டை சுமத்தி ஆசிரி யரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ஊர் பொதுமக்கள்  மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டி பள்ளியை முற்றுகையிட்ட னர். மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனையில் மாவட்ட கல்வி அலுவலர் உடனடி யாக மறு விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து, குற்றம் சாட்டப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட  ஆசிரியரை மீண்டும் பள்ளியில் பணி ஏற்க ஆவன செய்ய வேண்டும் என்று ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். மேலும் ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.  இதனையடுத்து தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரடியாக வந்து, ஊர் பொதுமக்களிடம் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொதுமக்கள் போராட் டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.

மதுக்கூரில் ‘மக்களை தேடி மாவட்ட நிர்வாகம்’  சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

தஞ்சாவூர், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றி யம் காசாங்காடு ஊராட்சி திருமண மண்டபத்தில், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை சார்பில்,  ‘மக்களை தேடி மாவட்ட நிர்வாகம்’ சார்பில் சிறப்பு  மருத்துவ முகாம் நடைபெற் றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக  அரசு தலைமை கொறடா கோவி. செழியன், நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேசுகை யில், “தமிழக அரசின் வழி காட்டுதலோடு,  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உடல்நலத்தை மேம்ப டுத்தும் பொருட்டு சிறப்பு மருத்துவ முகாம்களை கிராமம் தோறும் நடத்த திட்டமிடப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டத்தில் இது வரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி  திட்டத்தில் 2021-22 ஆம்  ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 15 ஆயிரத்து 655  கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 9.44 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அம்மா குழந்தை நலப் பெட்டகம் 11 ஆயிரத்து 714 தாய்மார்களுக்கும், அம்மா தாய் - சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் 4, 492 பேருக்கும் வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.  இம்முகாமில், பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தை நலம், எலும்பு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை, கண் மருத்து வம், நரம்பியல் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் ஆகிய சிறப்பு மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளித்தனர். மேலும், இசிஜி, ஸ்கேன், ரத்தத்தில் சர்க்கரை அளவு,  கொழுப்பு அளவு, ஹீமோகு ளோபின் அளவு, ரத்த வகை  கண்டறிதல், கர்ப்பிணி களுக்கு பரிசோதனை, காச நோய் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டன.

;