districts

திருச்சி விரைவு செய்திகள்

அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினால்  ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர், ஜூன் 16- திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் பொதுமக்க ளுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் மாத சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஆப் ரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வரு கின்றன.  அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயன் அடைந்துவரும் சந்தாதாரர்கள் தங்களின் விருப்பம் இல்லாமல் ஆப்ரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை கூறி அரசு செட்டாப் பாக்ஸை நீக்கம் செய்துவிட்டு தனியார் செட்டாப் பாக்ஸை மாற்றினால் உடனடி யாக 94980-17916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் செட்டாப் பாக்ஸ்கள் பழுத டைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தா மல் துண்டித்திருந்தாலோ, குடிபெயர்ந்து சென்றாலோ தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ், ஏவி கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை திரும்ப உள்ளுர் கேபிள் டிவி ஆப்ரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.  அத்தகைய செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உடன் வாடிக்கை யாளர்களிடமிருந்து பெற்று திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலு வலக துணை மேலாளர், தனிவட்டாட்சியரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


துப்புரவு பணியாளர்களுக்கு  சம்பள பாக்கி வழங்க சிஐடியு கோரிக்கை

திருவாரூர், ஜூன் 16- திருவாரூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 123 துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக சிஐடியு மாவட்டத் தலை வர் டி.முருகையன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருவாரூர் நகராட்சியில் 123 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மே மாதத்துக்குரிய சம்பளத்தை ஜூன் மாதம் 15 தேதியைக் கடந்த பிறகும் இன்னும் வழங்க வில்லை.  இதனால் ஊழியர்கள் அன்றாட செலவு களை சமாளிக்க சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளிகள்  திறக்கப்பட்டுள்ள நிலையில் ஊழி யர்களின் குழந்தைகளுக்குத் தேவையான பள்ளிக் கட்டணம், சீருடை உள்ளிட்ட செல வீனங்களுக்காக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், 15 நாட்களாகியும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி ஆணையர் மீது சம்பள சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனவும், மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்க ஆட்சியர் ஆவண செய்ய வேண்டுமென்றும் குறிப்பி டப்பட்டுள்ளது.


கல்லூரி முதல்வரை மாற்றக் கோரி  பேராசிரியர்கள் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 16- கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி முதல்வரை பணி இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் முதல்வர் துறையரசன் மீது ஆசிரியர் விரோதப் போக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிதியை தவறாக பயன்படுத்துவது அரசாணை 51-க்கு முரணாக தேர்வு நெறியாளர் பணியை கூடுதலாக கவ னித்து வருவது, முன்னாள் மாணவர் சங்கத்தை முடக்கும் வகையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கா மல் இருப்பது, முன்னாள் மாணவர் சங்கம் பெற வேண்டிய  நிதியை பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் முறை கேடாக நிதி வசூல் செய்வது போன்ற பல்வேறு குற்றச் சாட்டுகளை கல்லூரி பேராசிரியர்கள் சுமத்தினர். தமிழக அரசு கல்லூரியில் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கல்லூரி நிறைவு பெற்றதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சேர்ந்த ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


பைக் விபத்தில் வாலிபர் பலி  

தஞ்சாவூர், ஜூன் 16-  தஞ்சை பூக்கார அம்பலகார வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (36). இவருடைய மனைவி ஜீவிதா (26). இவர் பூண்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு ஜீவிதாவை அழைத்து வர மணிமாறன் பைக்கில் தளவாய் பாளையம் மாரியம்மன் கோவில் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதில் தலையில் படுகாயம் அடைந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று மணிமாறன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கந்து வட்டி கேட்டு  மிரட்டிய நபர் கைது  

தஞ்சாவூர், ஜூன் 16-  தஞ்சை அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் வேங்காரயன்குடிக்காடு வடக்குத் தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் நாராயணசாமி (56). இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு சிராஜ் நகரை சேர்ந்த குமரவேல் (41) என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கொடுத்த பணத்திற்காக குமரவேல் கடந்த மார்ச் மாதம் ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டி நாராயணசாமியை மிரட்டி பணம் வாங்கி உள்ளார். தொடர்ந்து நாராயணசாமியை மிரட்டி மேலும் கந்து வட்டி கேட்டுள்ளார்.  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியாவிடம், நாராயணசாமி அளித்த புகாரின் பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய குமரவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.


தெரு நாய்களை கட்டுப்படுத்த சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 16-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, ஆதனூரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடை பெற்றது.  ஐசக் நியூட்டன் தலைமையில் கூட்டத்தில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, பேராவூரணி ஒன்றியச் செயலா ளர் எம்.இந்துமதி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜாமுகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், ஆதனூரில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்திட, பேராவூரணி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதனூர் கிளைச் சாலை களில் படர்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி, அப்புறப்படுத்தி, பொதுமக்கள் இடையூறை போக்கிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.


பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு  எதிராக உள்ளக குழு அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை, ஜூன் 16-  அரசு மற்றும் தனியார் துறைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலி யல் வன்முறைக்கு எதிரான உள்ளக குழு அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணியிடத்து பாலியல் வன்கொடு மையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு)-ன் படி, பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், விற்பனை கடைகள், பயிற்சி நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் பட்சத்தில், அங்கு பாலி யல் வன்கொடுமையை தவிர்க்கும் வகையில் புகார் குறித்து உள்ளக குழுவினை (Internal Committee) அமைத்திடல் வேண்டும். அக்குழுவில் தலைமை அலுவலர் மூத்த நிலையிலான ஒரு பெண் அலுவலர், பணியாளர்களில் இரண்டு பேருக்கு குறை யாத உறுப்பினர்கள், பெண்களுக்கான சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறு வனம் அல்லது மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வுடைய நபர்களில் ஒருவர் என மொத்தம் நான்கு பேர்கள் இடம் பெற வேண்டும். நான்கு பேர்களில் 50 விழுக்காட்டிற்கும் குறையாத பெண் நபர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இக்குழு பணிபுரியும் பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்முறை குறித்து விசா ரணை மேற்கொண்டு சட்ட பூர்வமான நட வடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனமும் இக்குழுவினை உடனடியாக அமைத்து அதன் உறுப்பி னர்கள் விவரம் மற்றும் அவர்களின் தொலை பேசி எண் ஆகியவற்றை புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலக தொலை பேசி எண் 04322-222270 மூலம் தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் பணியிடத்து பாலியல் வன்கொடு மையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013-ன் படி உள்ளக புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலும், சட்ட விதிமுறைகளை மீறினாலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.


 

;