districts

திருச்சி விரைவு செய்திகள்

தமுஎகச கிளை மாநாடு

தஞ்சாவூர், ஜூன் 13 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் தமுஎகச கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் முருக.சரவணன், பட்டுக்கோட்டை கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை, அரசியல் செயல் பாட்டாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.  கிளைத் தலைவராக எஸ்.ஜகுபர்அலி, செயலாளராக பேரா.வேத.கரம்சந்த் காந்தி, பொருளாளராக பேரா.சண்முகப்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜூன் 18,  19 அன்று தஞ்சையில் நடைபெறும் தமுஎகச மாவட்ட மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது, மாதந்தோறும் கிளை  கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  முன்னதாக கலைச்செல்வன், சண்முகப்பிரியா, சந்தோஷ்  ஆகியோர் கதை வாசித்தனர். முனைவர் ஜீவானந்தம் பாடல் பாடினார். ஆர்.எஸ்.வேலுச்சாமி, “இலக்கியங்களில் வர்க்கப் பார்வை” என்ற தீக்கதிர் ஆசிரியர் கே.முத்தையா வின் நூலை விமர்சனம் செய்து பேசினார். 


மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு  

தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் அருள் மொழிப்பேட்டையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர்  ரவி கலந்து கொண்டார். கிளைத் தலைவராக விஜயகுமார், செயலாளராக நிர்மலா, பொருளாளராக திவ்யா தேர்வு செய்யப் பட்டனர். இதேபோல், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகிய நாயகிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அமைப்பாளர்கள் மேனகா, செந்தில்குமார் கலந்து கொண்டனர். கிளைத் தலைவ ராக ராஜேஷ்கண்ணன், செயலாளராக பானுமதி, பொருளாள ராக செல்வி தேர்வு செய்யப்பட்டனர். 


போலியாக கையெழுத்திட்டு  பண மோசடி: சகோதரர் மீது புகார்

தஞ்சாவூர், ஜுன் 13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வெள்ளா ளங்காடு பகுதியை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் பாஸ்கரன்.  இவர் சிங்கப்பூரில் பூக்கடை வைத்துள்ளார். அங்கு குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவருக்கு பெருமகளூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம்  தேதி பாஸ்கரனின் சகோதரர் தண்டபாணி,  பார்த்தசாரதி மற்றும் வங்கி மேனேஜர் ஆகியோர் உதவியுடன், பாஸ்கர னின் கையெழுத்தை போட்டு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றம்  செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பாஸ்கரன், தனது சகோதரர் தண்ட பாணியிடம் பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டுள் ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதையடுத்து பாஸ்கரன் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில், ஆய்வாளர் பொறுப்பு ரவிமதி மற்றும்  காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.


அடுத்தடுத்து 4 வீடுகளில்  நகை, பணம் கொள்ளை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 13 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர் சனிக்கிழமை காலை வீட்டை  பூட்டி விட்டு செட்டிக்குளம் பகுதியில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ள சென்றார். மாலை வீட்டிற்கு வந்து  பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டினுள் தூக்கு வாளிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26.5 பவுன் நகை, ரூ.2 லட்சம், வெள்ளி  வளையல், அரைஞாண்கொடி உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள்  திருடி சென்றுள்ளனர். மேலும் இவரின் பக்கத்து வீட்டிலும் ரூ.43  ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.  மண்ணச்சநல்லூர் எதுமலை பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (50). இவர் சனிக்கிழமை காலை திருமண நிகழ்ச்சிக் காக பெரம்பலூர் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பிய போது,  வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில்  வைக்கப்பட்டிருந்த 15.5 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது. இதேபோல் அவரது பக்கத்து வீட்டி லும் 1.5 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஆட்சியர் பெயரில்  போலி வாட்ஸ்அப்  கணக்கு துவங்கி மோசடி

திருவாரூர், ஜூன் 13 - திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில், அவருடைய புகைப்படத்துடன் போலி வாட்ஸ் அப் கணக்கு துவங்கி, மோசடி முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து சைபர் கிரைம்  போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.  இந்த போலி கணக்கின் மூலம் திருவாரூர் மாவட்ட திட்ட  அதிகாரி ஸ்ரீலேகா உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தனக்கு அமேசான் கிப்ட் கார்டு வாங்கித் தர  வேண்டியும், முக்கியமான கூட்டத்தில் இருப்பதால், தன்னால்  வாங்க முடியவில்லை என்றும் கூறி மர்ம நபர்கள் மோசடி  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தனது அதிகாரப் பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன், “தான் யாரிடமும் எவ்வித பண உதவி யும் கோரி தொடர்பு கொள்ளவில்லை. இதுபோன்ற போலி  கணக்குகளை நம்பி ஏமாற வேண்டாம்” என குறிப்பிட்டுள் ளார். இதுகுறித்த விசாரணை தொடர்கிறது.


மினி மாரத்தான் ஓட்டம்

 தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மாணவர்களின் நற்பண்புகளை மேம்படுத்துதல் மற்றும் உடல் திறன் வளர்த்தல் என்ற நோக்கில், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மற்றும் சோழ நாடு கிராம விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய மினி மாரத்தான் (நெடுந்தூர ஓட்டம்) பேரா வூரணி வட்டார அளவில் நடைபெற்றது.  தஞ்சாவூர் அமெச்சூர் கபாடி கழகத்தின் துணைத்தலை வர் தென்னங்குடி ஆர்.ராஜா தலைமை வகித்து தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பேராவூரணி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பி.சிவசாமி, மெடிக்கல் ஆர்.கண்ணன், வெண்புறா கபடி கழகத் துணைத் தலைவர் எஸ்.சடகோபன்,  உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.சோலை, ஏ.ரெங்கேஸ்வரி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.   பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத் தில் தொடங்கிய நெடுந்தூர ஓட்டம், நீலகண்டப் பிள்ளை யார் கோயில் வரை சென்று, மீண்டும் மைதானத்தை வந்தடைந் தது. 5 கி.மீ அளவிலான ஓட்டத்தில் 160 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்  வழங்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் என்.சுப்பிரமணி யன் நன்றி கூறினார்.


பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம்  கடன் உதவி வழங்கல்:  விண்ணப்பம் வரவேற்பு

தஞ்சாவூர், ஜூன் 13-  தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம் பாட்டுக் கழகம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங் களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார்.  ஆண்டு வருமானம் ரூ.3  லட்சத்துக்கு மிகாமலும், 18  வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் 60 வயதிற்கு மேற் பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். பொது காலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம்  அதிகபட்சமாக ஒரு பயனா ளிக்கு 15 லட்சம் வரை  கடன் உதவி வழங்கப்படு கிறது. ஆண்டு வட்டி விகிதம்  6 விழுக்காடு முதல் 8 விழுக் காடு வரை வசூலிக்கப்படும்.  பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ்  அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை, 5 விழுக்காடு வட்டி  விகிதத்தில் கடன் வழங்கப் படுகிறது. இதேபோல், மக ளிர் சுய உதவிக் குழுக்களுக் கும், இரண்டு கறவை மாடு கள் வாங்க தலா ரூ.30 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டுக்கு 6 விழுக்காடு வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.  மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு  வங்கிகளில் கடன் விண்ணப் பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும்  மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.


ஆலடிக்குமுளை அரசுப் பள்ளிக்கு  கட்டடம் கட்ட ரூ.20 லட்சம்  வழங்கிய முன்னாள் மாணவர்

தஞ்சாவூர், ஜூன் 13-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், ஆலடிக்குமுளை யில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 10 ஆம்  வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்ற னர். பள்ளியில் போதிய அளவு இடவசதி இல்லாத நிலையில், 6,7  ஆம் வகுப்புகள் ஒரு வகுப்பறையிலும், 7, 8 ஆம் வகுப்புகள் ஒரு வகுப்பறை யிலும் நடத்தப்பட்டு வந்தன.  இடநெருக்கடி காரணமாக மாணவர்கள் அவதிப்பட்டு வந்ததை யறிந்த, இதே பள்ளியின் முன்னாள் மாணவரும், வெளிநாடு வாழ் தொழி லதிபருமான, வீரக்குறிச்சியை சேர்ந்த அருள்சூசை, பள்ளிக் கட்ட டம் கட்டுவதற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முன்வந்தார். இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் அனுமதி  பெற்று, கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் கு .திராவிடச்  செல்வம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  கா.அண்ணாதுரை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, கட்டடப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி, நன்கொடையாளர் அருள்சூசையை வாழ்த்திப் பேசினார்.


 

;