districts

திருச்சி விரைவு செய்திகள்

விளைபொருட்களின் விலை விவரம்

அரியலூர், டிச.3 - அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு  வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விபரம் வரு மாறு: மக்காச்சோளம் (100கிலோ) - ரூ.1,595, கடலை (50 கிலோ ) - ரூ.2,927. ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்  விற்பனை கூடத்திற்கு வரப் பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வருமாறு: மணிலா (80 கிலோ) - ரூ.8,469, எள்  (80 கிலோ) -ரூ.9,339, மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,669.  ஆண்டிமடம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு  வரப் பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விவரம் வரு மாறு: விவசாய கம்பு - (100 கிலோ) - ரூ.1,650.

மாத்தூர் ஊராட்சி செயலர்  குடும்பத்திற்கு நிதியுதவி

கும்பகோணம், டிச.3 - தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்  ஊராட்சி மன்ற செயலாளர் சங்கத்தின் உறுப்பினரும் மாத்தூர் ஊராட்சி மன்ற செயலாளருமான யு.செல்வகுமா ரின் தாயார் சுந்தராம்பாள் அம்மையார் வியாழக்கிழமை கால மானார். இந்நிலையில் ஊராட்சி செயலர் குடும்பத்திற்கு இறப்பு ஈமச் சடங்கிற்கு, முதன்முறையாக திருவிடைமருதூர் ஒன்றி யம் ஊராட்சி மன்ற செயலர்கள் சங்கம் சார்பாக ரூ.5000 உத வித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்க தலைவர் வரதராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் கணேசன், துணைத் தலைவர் இராம தாஸ், செயலாளர் குருமூர்த்தி, துணை செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், பொருளாளர் ரீனா, கவுரவத் தலைவர் சாமிநாதன் மற்றும் அனைத்து ஊராட்சி செயலர்களின் முன்னிலையில் இறப்பு தொகை வழங்கப்பட்டு அம்மை யாருக்கு அஞ்சலியும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரி விக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர், டிச.3- தஞ்சாவூர் சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு, தஞ்சாவூர் சரக காவ‌ல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்படி, தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.ஜெயச்சந்திரன் நேரடி  மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் பூ.மணிவேல் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 4 உதவி  ஆய்வாளர்கள், 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 31  காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த தனிப்படையினர் கடந்த மாதம் அதிரடி வேட்டை நடத்தி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்காரர்களை கைது  செய்து 15 வழக்குகள் பதிவு செய்தனர். இதில், 4 இருசக்கர  வாகனங்கள் உள்பட 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக பணிபுரிந்த தனிப்ப டையினரை ஊக்குவிக்கும் விதமாக, தஞ்சை சரக காவல்துறை  துணைத் தலைவர் பிரவேஷ் குமார், அவர்களை தனது அலு வலகத்திற்கு அழைத்து, அனைவருக்கும் ரொக்கப்பணம் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஜன.1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மீறுவோருக்கு அபராதம் : தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர், டிச.3 - தஞ்சாவூரில் ஒருமுறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் நெகிழிப் பொருட்களை கட்டுப்ப டுத்தி, பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாவட்ட மாக மாற்றிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும்  கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சிகள் உதவி இயக்கு நர் அலுவலர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சி கள்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி மற்றும் பொது), டாஸ்மாக் அதி காரிகள், கலால் துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவ லர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரி கள் கலந்து கொண்டனர். இதில் ஆட்சியர் பேசுகையில், “ஒருமுறை  பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்  பொருட்களின் மீதான தடையினை, அறிவித்து  தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவி லான மற்றும் தடி கொண்ட கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுக்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பை கள், உணவுப் பொருட்களை கட்ட பயன்ப டுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர்  பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு  குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து  வைப்பதும், விநியோகிப்பதும்,

போக்கு வரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்ப தும் தடை செய்யப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.1.2022 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி  எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான  தடையினை முழுமையாக அமல்படுத்தவும், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அவற் றிற்கு மாற்றுப் பொருட்கள் பற்றிய விழிப்பு ணர்வினை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1.1.2022 முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்கள் பறிமுதல் மற்றும் பயன்படுத்து வோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது. மீறினால் நடுத்தரம் மற்றும்  பெரிய கடைகளுக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.     மேலும், சுற்றுச்சூழல் மீதான அக்கறை  கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற் பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்ட விரோத மாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,  எண்.23, சிட்கோ தொழில் வளாகம், உழவர் சந்தை எதிரில், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 என்ற முகவரிக்கு நேரிலோ, கடிதம் மூலமாகவோ, 04362-256558 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூல மாகவோ மற்றும்  deetnj@tnpcb.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க லாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 

;