districts

திருச்சி விரைவு செய்திகள்

கீரமங்கலம் பேரூராட்சியில்  வேலை வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.1 - தேசிய வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கீரமங்கலம் பேரூராட்சியை இணைத்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படை யில் கீரமங்கலம் பேரூராட்சியில் உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கேட்டு புதுக் கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் செவ்வா ய்க்கிழமை மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆ.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன், நகரச் செயலாளர் ஞான.பாலா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுகாதார ஆய்வாளர்கள் கைது: தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.1- தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்களன்று சென்னையில் 1,646 சுகாதார ஆய்வாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் மாவட்ட செயலாளர் சுதாகர், கூட்டமைப்பின் செயலாளர் மு.சிங்காரவேல், மருந்தாளுநர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தஞ்சாவூரில் 168 சுகாதார ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, மருத்துவமனைகளில் உடற்கூறாய்வு பரிசோதனைக்கான சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட பணிகள் தடைபட்டன.

பொதுத்துறை ஊழியர் சங்க கூட்டமைப்பின் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.1 - ‘இந்திய தேசத்தை பாதுகாப்போம், பொதுத்துறையை பாதுகாப்போம், தனியார்மயத்தை தடுத்திடுவோம்’ என்ற தலைப்பில் ஒன்றிய, மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் கருத்த ரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் சுவாமிநாதன் சிறப்புரை யாற்றினார். பிஎஸ்என்எல்இயு மாவட்ட உதவி செயலாளர் அஸ்லம்பாஷா, பிஇஎப்ஐ மாவட்ட செயலாளர் மனோகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிச் சாமி, ஜிஐசி இணைச் செயலாளர் ராஜமகேந்திரன், லிகாய் தென் மண்டல குழு பொன்.வேலுச்சாமி, பெல் சிஐடியு சங்க  பொதுச் செயலாளர் பிரபு, டிஆர்இயு துணை பொதுச் செயலா ளர் மாதவன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட  செயலாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க  பொதுச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கனமழையால் வீடு இடிந்து  விழுந்து மூதாட்டி படுகாயம்

தஞ்சாவூர், டிச.1 - நாடங்காடு கிராமத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாய மடைந்தார். பேராவூரணி அருகே நாடங்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (64). கண வனை இழந்த இவர், தனது மகன் மதிவா ணனுடன் தனது ஓட்டு வீட்டில் வசித்து வரு கிறார். பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு மாத மாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லிகா தனது வீட்டில் இரவு நேர உணவு தயார் செய்வதற்காக சமையலறை பக்கம்  சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவித மாக வீட்டின் சுவர் இடிந்து மல்லிகா மீது விழுந்தது.  வலியால் அலறித் துடித்த மல்லிகாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  இடிபாடுகளில் சிக்கியிருந்த மல்லிகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். படுகாயமடைந்த மல்லிகா பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீடு இடிந்தது  இதேபோல் பேராவூரணி அருகே அம்மை யாண்டி மேற்கு பஞ்சாயத்து, வீரராகவ புரம் கடைவீதி அருகில் வசித்து வருபவர்  திருப்பதி(75). இவரது மனைவி அங்கை யற்கண்ணி (65), இவர்களுக்கு யானைக்கால் நோயால், உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப் பையன் (52), பாஸ்கர் (45) என இரு மகன்கள்  உள்ளனர். மிகவும் வறிய நிலையில் வாழ்வா தாரத்திற்காக தவித்து வரும், இக்குடும்பத்தி னர் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப் பாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் ராமநாதன் சந்தித்து ஆறு தல் கூறினார். கிராம நிர்வாக அலுவலர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.