districts

திருச்சி முக்கிய செய்திகள்

வெளிநாட்டில்  இறந்த கணவரின் உடலை மீட்டுத் தருக எம்எல்ஏ-விடம் மனைவி கோரிக்கை

பெரம்பலூர், டிச.9-  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சி, அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சங்கீதா. இவர் வியாழனன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ எம்.பிரபாகரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.  அந்த மனுவில் தெரிவித்துள்ள தாவது:  எனது கணவர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற தாகவும் இந்நிலையில் நவம்பர் 16 அன்று அந்நாட்டில் அவர் இறந்து விட்டதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் தங்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.  எனவே, உடனடியாக அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து உதவிடுமாறும் தெரிவித்திருந்தார்.  மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அப்போது முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.செல்வகுமார், கவுன்சிலர் பாஸ்கர் உடனிருந்தார்.

நெல்லை அருகே  குழந்தையுடன்  தாய் மாயம்

திருநெல்வேலி, டிச.9- நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் உள்ள திருமால் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி குமாரி (31). இவர்களுக்கு சீதாலட்சுமி (3) என்ற மகள் உள்ளார். நந்தினிகுமாரி மகள் சீதாலட்சுமியுடன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். நீண்ட நேரம் அவர் திரும்பி வராததால் அவரது செல்போனுக்கு ராஜசேகர் தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் நந்தினி குமாரி யையும், சீதாலட்சுமியையும் எங்கும் காணவில்லை. இதனால் ராஜசேகர் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தாய்- மகளை தேடி வருகிறார்கள்.

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

தென்காசி, டிச.9- தென்காசியில் போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், ராஜாங்கபுரம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவரின்தந்தை கருப்பசாமி. அவருக்கு சொந்தமான ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிலத்தைமுருகையா என்பவருக்கு பவர் கொடுத் துள்ளார். பின்னர் கருப்பசாமி மறைந்த பின்பு முருகைய்யாவுக்கு பவர் கொடுக் கப்பட்ட இடம் தன்னுடையது தான் எனகூறி மோசடி செய்து அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரிடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் தங்களது நிலத்தை மீட்டு தருமாறு சீதாலட்சுமி தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த 10.11.2021 அன்று கொடுத்த புகாரின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை யில் காவல் ஆய்வாளர் சாந்தி செல்வி, சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வி ஆகி யோர் விசாரணை மேற்கொண்டு ரூ.8 லட்சம் மதிப்பிலான நிலம்  மீட்கப்பட்டு சீதாலட்சுமியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. 

 

;