districts

திருச்சி முக்கிய செய்திகள்

பள்ளிகள் அருகே சாராய விற்பனை

மயிலாடுதுறை, டிச.4 - மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரி விக்கின்றனர். குறிப்பாக சின்னங்குடி பள்ளிக்கூடம், பேருந்து  நிலையம், கடற்கரை, மருதம்பள்ளம் பள்ளிக்கூடம், காலம நல்லூர் என குறிப்பிட்ட நான்கு இடங்களில் இரவு,பகல் என  எந்நேரமும் சாராய விற்பனை நடப்பதால் பள்ளி மாண வர்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மயிலா டுதுறை மாவட்ட காவல்துறையும், பொறையார் காவல்துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை கவனம் பெறுமா?

பெற்றோர் - ஆசிரியர்  கழக நிர்வாகிகள் தேர்வு

வலங்கைமான், டிச.4 - வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசினர் மேல் நிலைப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகி கள் தேர்வு நடைபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு சனிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சேரன் தலைமை வகித்தார். வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் பட்ட யதார் கோ.தெட்சிணாமூர்த்தி சிறப்புரையாற்றினார். பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் தேர்வில், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவரும், வழக்கறிஞருமான ஏ.எம்.மோகன் தலைவராகவும், பள்ளியின் தலைமை யாசிரியர் எஸ்.சேரன் செயலாளராகவும், பட்டதாரி ஆசிரியர்  டி.எஸ்.இராஜேந்தர் பொருளாளராகவும் மற்றும் துணைத் தலைவர், துணை செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அனைவரும் பொறுப்பேற்று கொண்டனர்.  பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.எம்.மோகன்,  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குறள் தெளிவுரை புத்தகம் வழங்கினார்.

மத்திய மண்டல காவல்துறை  தலைவர் தஞ்சையில் ஆய்வு 

தஞ்சாவூர், டிச. 4 - தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் வெள்ளிக் கிழமை வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.  அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தன்னலம் பாராமல் உதவிகளை செய்த, தன்னார்வலர்களுக்கு அவர்களின் சேவையினை ஊக்கு விக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து, கேடயம் வழங்கி  அவர்களுடைய சேவையை பாராட்டினார்.  மேலும், ஆதரவற்ற மற்றும் பிள்ளைகளால் கைவி டப்பட்ட முதியோர்களுக்கு உணவுப்பொருட்கள், பழங்கள்,  உடைகள் ஆகியவற்றை வழங்கி, அவர்களின் பாதுகாப்பை  உறுதி செய்திடுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி னார். சிறுவர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை  வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த காவல்நிலைய ஆளினர்கள் மற்றும் தனிப்பிரிவு காவ லர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி மற்றும் காவல் அதி காரிகள், காவலர்கள் கலந்து கொண்டனர். 

அடையாள அட்டை வழங்கல்

தஞ்சாவூர், டிச.4 - பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில் உறுப்பினர்  அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஏகா விழா அரங்கில் சனிக்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். வார்டு நிர்வாகிகளிடம் உறுப்பினர் அடை யாள அட்டை வழங்கப்பட்டது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு

தஞ்சாவூர், டிச.4 -  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை கழிவறை தண்ணீர் தொட்டியில் இறந்த  நிலையில் பெண்சிசு கிடந்தது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், ஐ.சி.யூ. பிரிவில், சனிக்கிழமை காலை கழிவறையை சுத்தம் செய்ய, துப்புரவு  பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியை திறந்த  போது, தொப்புள்கொடி கூட அகற்றப்படா மல் மூழ்கிய நிலையில், பிறந்த பெண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த மருத்து வர்களுக்கு தகவல் அளித்தபின், மருத்துவக் கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் மற்றும் மருத்து வக் கல்லூரி காவல்துறைக்கு தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையி னர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூ ராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக் கான வார்டு கிடையாது. ராசா மிராசுதார் அரசு  மருத்துவமனையில் மட்டுமே பிரசவ வார்டு,  குழந்தைகளுக்கான சிகிச்சை பகுதி செயல் பட்டு வருகிறது. அப்படி உள்ள நிலையில், பிறந்த பச்சிளம் குழந்தை எப்படி வந்தது? மருத்துவமனைக்கு வெளியே பிறந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து போட்ட னரா?  என்பதை அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா வில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை  நடத்தி வருகிறார்கள்.  இதில் வெள்ளிக்கிழமை இரவு 8:22 மணிக்கு  கழிவறை பகுதியில் ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணுடன் முதியவர் ஒருவரும் செல்லும்  காட்சிகள் பதிவாகியுள்ளன என தெரிய வந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆய்வு

பாபநாசம், டிச.4 - பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் பேரூராட்சி பகுதிக்குள் தொடர்மழையால் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம், திருப்பாலத்துறை அங்காடி ‌அருகே மழைநீர் தேங்கி நிற்பதாகவும், அங்காடிக்கு வரும் பொதுமக்கள், அங்காடி அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவதாலும் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர் காப்பன் தெருவில் மழை பாதித்த இடங்களையும், புனித செபஸ்தியர் திருத்தலம் அருகில் வாய்க்கால் கரையில் இருப்பவர்களின் வசிப்பிடங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து பாபநாசம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றவர் மழையால் சேதமடைந்த சுற்றுச் சுவரை பார்வையிட்டார். அங்குள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்று அங்குள்ள கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு வகுப்பிலிருந்த மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
 

;