districts

திருச்சி விரைவு செய்திகள்

தங்கம் என நினைத்து கவரிங்  நகையை திருடிய கொள்ளையர்கள்

அரியலூர், நவ.15 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குருவா லப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்.  இவர் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மெயின்ரோட் டில் வீட்டுடன் சேர்ந்து மளிகைக் கடை மற்றும் அடகு கடை  வைத்து நடத்தி வருகிறார். இதில் அடகு கடையில் கவரிங் நகைகளையும் சேர்த்து விற்பனை செய்து வருகிறார்.  இந்நிலையில் வெங்கடேசன் ஞாயிறன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் தூங்கிவிட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவசர அவசரமாக அடகு கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த  கவரிங் நகைகள் அனைத்தும் தங்க நகைகள் என நினைத்து  ஆசையோடு திருடினர். பின்னர் திருடிய நகைகளை மூட்டை  கட்டி அங்கிருந்து தப்பிவிட்டனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்து வெங்கடேசன் வெளியே  வந்து பார்த்த போது அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. மேலும் கடை மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட் டுள்ள சிசிடிவி கேமராக்களை துணியால் மூடி கொள்ளை யர்கள் திருடி சென்றது தெரியவந்தது.  பின்னர் இதுகுறித்து வெங்கடேசன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர் களை தேடி வருகின்றனர். இதனிடையே தங்க கொள்ளை யர்களுக்கு, திருடிய நகைகள் அனைத்தும் கவரிங் நகை கள் என தெரியவந்ததும், ஆத்திரத்தில் அங்குள்ள முந்திரி 

மணமேல்குடி ஒன்றியத்தில்  மருத்துவ முகாம் முன்மதிப்பீடு தொடக்கம்

அறந்தாங்கி, நவ.15 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி  வழிகாட்டு தலின்படி, மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 1 முதல் 18  வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறன் கொண்ட மாணவர்க ளுக்கு மருத்துவ முகாம்  முன் மதிப்பீடு கோட்டைப்பட் டினம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கியது. இம்மருத்துவ முன் மதிப் பீடு முகாமினை மண மேல்குடி வட்டார கல்வி அலு வலர் முத்துக்குமார், மண மேல்குடி வட்டார வள மைய  மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் தொடங்கி வைத் தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிஸார் முன்னிலை வகித்தார். ஒன்று முதல் 12 வகுப்பு வரை பள்ளியில் படிக்கிற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் முன் மதிப்பீடு அனைத்து மாண வர்களுக்கும் நடைபெற்று வருகிறது.  இம்முகாமில் கொரோனா  காரணமாக கடந்த ஒன்றரை வருட காலத்துக்கும் மேலாக  மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவியர்கள் வீட்டு வழி கல்வி மற்றும் இணைய வழிக் கல்வி மூலம் பயின்று வந்தனர்.  மருத்துவம் முன் மதிப் பீட்டு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவி யர்களின் தேவைகளை அதா வது மாற்றுத்திறன் மாண வர்களின் தேசிய அடையாள அட்டை, வருடாந்திர பேருந்து, ரயில் பயண சலுகை அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி அறுவை சிகிச்சை போன்றவைகள் மூலம் மாற்றுத்திறன் மாண வர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவை யான உதவி உபகரணங்கள் வழங்கும் பொருட்டு முகாம் நடைபெற்று வருகிறது.

அஞ்சலகங்களில் ஆதார்  சிறப்பு முகாம் தொடக்கம்

பட்டுக்கோட்டை, நவ.15 - பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் எம். கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டுக்கோட்டை  அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப் பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வடசேரி, ஒரத்தநாடு, மதுக்கூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, வேதா ரண்யம் உள்ளிட்ட 28 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு  மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நவ.15 முதல் நவ. 30 வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது.  முகாமில், இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்ய லாம். பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொ பைல் எண் திருத்தம் செய்ய ரூ.50, பயோமெட்ரிக் திருத்தம்  செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு  முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து  கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பட்டுக்கோட்டை யில் நடைபெற்ற முகாமை கோட்ட அஞ்சல் கண்காணிப்பா ளர் எம்.கணேஷ் தொடங்கி வைத்தார்.  பட்டுக்கோட்டை தலைமைத் தபால் நிலையம், நாடிமுத்து  நகர் தபால் நிலையம், பேராவூரணி, மதுக்கூர், ஒரத்தநாடு ஆகிய தபால் நிலையங்களிலும் முகாம் தொடங்கியது. 

நடமாடும் உர விற்பனை நிலையம் அமைக்க வேண்டுகோள்

பேராவூரணி, நவ. 13 - பயிர் சாகுபடிக்கு தேவை யான உரங்கள் தங்கு  தடையின்றி விவசாயி களுக்கு கிடைத்திட நடமா டும் உர விற்பனை நிலையம் அமைத்திட பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி சில்லரை உர விற்ப னையாளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில், “பேராவூரணி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் பணி மற்றும் நடவுப் பணி தற் போது நடைபெற்றுக் கொண் டுள்ளது.  இத்தருணத்தில் பயிர் சாகுபடிக்கு தேவை யான உரங்கள் தங்கு தடை யின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட நடமாடும் உர  விற்பனை நிலையம் அமைத்து உரவிற்பனை மேற்கொள்ள சில்லரை உர விற்பனையா ளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  நடமாடும் உர விற்பனை நிலையம் மூலம் உர விற்பனை மேற்கொள்ளும் போது பி.ஓ.எஸ் மெஷின் மூலம் பட்டியலிட்டு உர விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

உர விற்பனை மேற்கொள்ளும் நபர்கள்  அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நடமாடும் உர விற்பனை மேற்கொண்ட விபரத்தினை தினசரி அறிக் கையாக மாலை 3 மணிக்குள்  வேளாண்மை உதவி அலுவ லருக்கு சமர்ப்பித்திடல் வேண்டும். யூரியா, சூப்பர் பாஸ் பேட், பொட்டாஷ், டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்க ளுக்கு அரசு நிர்ணயித்து உள்ள விலைக்கு மிகாமல் உர விற்பனை மேற்கொள் ளப்பட வேண்டும். உரங்க ளின் இருப்பு பிஓஎஸ் மெஷின் இருப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சரியாக இருக்க வேண்டும். உர விற்பனை விலை யில் வேறுபாடுகள் இருப்ப தாக புகார்கள் வரப்பெற் றாலோ பிஓஎஸ் மெஷின் இருப்பும் உண்மை இருப்பும் ஒப்பிட்டு  பாரக்கும் போது வேறுபாடு கள் காணப்பட்டாலோ உரக்  கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி உர உரிமத்தை ரத்து  செய்திட நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என தெரி வித்துள்ளார்.

உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

காரியாபட்டி, நவ.14- குழந்தைகள் தினத்தையொட்டி விருது நகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கி படிக்கும் மாணவ, மாணவி களுக்குத் தேவையான நோட்டு புத்த கங்கள், போர்வை, வாளி, பாய், சோப்பு போன்ற பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: மந்திரி ஓடை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் சமூ கத்தைச் சேர்ந்த 24 குழந்தைகள் மற்றும் காரியா பட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20 குழந்தைகள் என மொத்தம் 44 பேர் இங்கு தங்கி படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது என தெரிவித்தார். பின்பு, வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக் கன்றுகளை நட்டார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, வட்டாட்சியர் தனக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந் தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

;