districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருவாரூர்: 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

திருவாரூர், டிச. 21 - வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட வழித்தடத்தில் பழுது நீக்கும் பணி கள் நடைபெறவுள்ளதால் புதன், வியா ழன் (டிசம்பர் 22, 23) ஆகிய இரண்டு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப் படவுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.  அதன்படி வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பாபநாசம் ஒன்றி யம் - குடமுறுட்டிகுழாய் தாங்கும் பாலத் தின் மீதுள்ள 900 மி.மீ விட்டம் உள்ள எம்.எஸ். நீர் உந்துகுழாயில் வெல்டிங் செய்தல், பாபநாசம் ஒன்றியம் காவிரி ஆறு குழாய் தாங்கும் பாலத்தின் அரு கில் 900 மி.மீ விட்டம் உள்ள எம்.எஸ்.  நீர் உந்துகுழாயில் வெல்டிங் செய்தல்,  பாபநாசம் ஒன்றியம் - அரசலாறுகுழாய் தாங்கும் பாலத்தின் அருகில் 900 மி.மீ  விட்டம் உள்ள எம்.எஸ் நீர் உந்துகுழா யில் வெல்டிங் செய்தல். கோட்டூர் ஒன்றியம் - ஆதிச்சபுரம் முள்ளியாறு குழாய் தாங்கும் பாலத்தின்  அருகில் குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள 1100 மி.மீ விட்டம் உள்ள எம். எஸ். நீர் உந்து குழாயில் வெல்டிங் செய்தல், முத்துப்பேட்டை ஒன்றியம் -  சந்தனவாய்க்கால் குழாய் தாங்கும்  பாலத்தின் மீதுள்ள 900 மி.மீ. விட்ட முள்ள எம்.எஸ். நீர் உந்துகுழாயில் வெல்டிங் செய்தல். முத்துப்பேட்டை ஒன்றியம் - சார நத்தம் வாய்க்கால் குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள 900 மி.மீ. விட்டம் உள்ள எம்.எஸ். நீர் உந்துகுழாயில் வெல்டிங் செய்தல் காரணமாக 22.12. 2021 மற்றும் 23.12.2021 ஆகிய நாட்க ளில் குடிநீர் நிறுத்தம் செய்வதால் இத்திட் டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து  கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம், ஊரக குடிநீர்த் திட்டக் கோட்டம், நிர்வாகப் பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சிஐடியு கிளை கூட்டம் 

தஞ்சாவூர், டிச. 21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) பேராவூரணி கிளை கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்கப் பொருளாளர் ஆர்.வெங்கடா ஜலபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய சங்க பொதுச்  செயலாளர் ஏ.கோவிந்தராஜ், ஓய்வு பெற்றோர் சங்க மாநில பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தலைவராக என்.நவ நீதன், செயலாளராக கி.ரகு, பொருளாளராக முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

சில்லரை விற்பனை உரக் கடையில்  மொத்த வியாபாரம் செய்தால் நடவடிக்கை

அரியலூர், டிச. 21 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உர விற்பனையாளர்கள் இருப்பு மற்றும் விற்பனை விலை குறித்த தகவல் பலகையை பராமரிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உரம் விற்பனை செய்யும் போது இயற்கை உரங்கள் /வளர்ச்சி ஊக்கிகள் உயிர் உரங்கள் பூச்சிக்கொல்லிகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக் கூடாது. உரிமத்தில் அனுமதி வழங்கிய இடத்தில் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். உரிமங்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்பு வைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட இடங்களில் உர உரிமத்தின் நகல் வைக்க வேண்டும். சில்லரை விற்பனையினை விற்பனை முனைய இயந்தி ரம் மூலம் மட்டுமே மேற்கொண்டு ரசீது வழங்க வேண்டும். விவசாயிகளின் நில உடைமை பரப்பிற்கு மட்டுமே உரங்கள் விற்பனை செய்ய வேண்டும்.  மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை இரண்டிற்கும் தனித்தனியே இருப்பு பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். ஒருவகை உரத்தினை ஒரு  மூட்டைக்கு மேல் திறந்து வைத்திருத்தல் கூடாது. உரம் எடை போடும்  தராசு முத்திரையிடப்பட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்.  சில்லரை உரிமை பெற்றவர்கள் மொத்த விற்பனை ஏதும் செய்யக்கூடாது.  சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படும் உரக் கடைகளின் மீது உரக்கட்டுப் பாட்டு ஆணை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

பேராவூரணி பேருந்து நிலைய  கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் 

தஞ்சாவூர், டிச.21 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில், சாலை விரிவாக்கம் செய்யும் பணி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத் தல், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை இடம்மாற்றுதல், சாலை நடுவே சென்டர் மீடியன் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் பல கோடி ரூபாய் மதிப் பீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் மழை நீர் வடிகால் வாய்க்கால்  முழுமை பெறாமல் பாதியோடு நின்றது. இதனால்  மழைநீர் தேங்கி நின்று, சாலையில் சாக்கடை நீராக வழிந்தோடியதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.  பேராவூரணி பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலைய வளாகத் தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள், சாலையை ஆக்கிரமித்து கட்டப் பட்டு இருந்ததால், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி முடியா மலிருந்தது.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் காவல்துறை உதவியுடன் அங்கிருந்த 30-க்கும் மேற்பட்ட ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி னர்.  அப்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாமல் கடைகளை இடிப்ப தாகவும், இதனால் பொருட்கள் நாசமாதாகவும் கூறி வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முறையாக அளவீடு செய்யப்படாததால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை சமாதானம் செய்து அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிர மிப்புகளை அகற்றி வருகின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் மழைநீர் வடி கால் வாய்க்கால் அமைக்கும் பணி முழுமை பெறும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.
 

;