districts

திருச்சி முக்கிய செய்திகள்

பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து கருத்தரங்கம் 

திருச்சிராப்பள்ளி, டிச. 8 - அகில இந்திய பிஎஸ்என்எல் டி.ஓ.டி ஓய்வூதியர் சங்கம்,  பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் தமிழ்நாடு  காண்ட்ராக்ட் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று திருச்சி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அலுவல கத்தில் தேசிய பணமாக்கல் திட்டத்தை எதிர்த்து கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு அகில இந்திய பிஎஸ்என்எல் டிவிடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜான்பாஷா தலைமை வகித்தார். தேசிய பணமாக்கல் திட்டத்தை விளக்கி ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலா ளர் சின்னையன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலா ளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். 

மோட்டார் சைக்கிளை  திருடிய இருவர் கைது 

தஞ்சாவூர், டிச.8 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், விளத்தூர் பகுதியை  சேர்ந்த மணிகண்டன் (25), தனது மோட்டார் சைக்கிளில் கடந்த டிச.4 அன்று அம்மாப்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர்  அம்மாப்பேட்டை சந்தை பகுதியில் தனது வண்டியை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வண்டியை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணிகண்டன் அம்மாப்பேட்டை காவல்நி லையத்தில் புகார் செய்ததன் பேரில், காவல்துறை உதவி  ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டார். இதில் மகிமாலை பகுதி மேற்கு தெருவை சேர்ந்த முத்து (19), அருந்தவபுரம் தோப்புத்தெரு ராஜ்குமார்  (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் அம்மாப்பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வாகன நிறுத்தப் போராட்டத்தை  விளக்கி தெருமுனைப் பிரச்சாரம்

புதுக்கோட்டை, டிச.8 - ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தி டிச. 10 ஆம் தேதி பகல் 12  மணி முதல் 12.10 வரை நடைபெறவுள்ள வாகன நிறுத்தப்  போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார் கோவில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  துணைச் செயலாளர் எஸ்.பீமராஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

நூதன முறையில் ஏமாற்றி  ஏடிஎம்மில் பணம் திருடிய பெண் கைது

அரியலூர், டிச. 8 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதித் தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அதே தெரு வில் 5-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும் உள்ளன.  இதில் வயதானவர்கள், படிக்காதவர்கள் என ஏராளமானோர் பணம்  எடுப்பதற்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க  தெரியாததால் அவர்களது அறியாமையை பயன்படுத்தி, ஏடிஎம் கார்டு களை மாற்றிக் கொடுத்துவிட்டு பணம் திருடு போவதாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் உத்தரவின்பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை யிட்டனர். அப்போது  சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நீண்ட நேரமாக ஏடிஎம் வாசலில் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.  இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம்  பெரியார் நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி (28) என்பதும், வயதானவர்க ளிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

குளறுபடியில்லாமல் விவசாயிகளுக்கு  நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

தஞ்சாவூர், டிச.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு கூட்டம் செங்கிப்பட்டியில்  ஒன்றியக்குழு உறுப்பி னர் கே.மருதமுத்து தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  டிசம்பர் 18,19-ல் தஞ்சையில் நடைபெற வுள்ள சிபிஎம் மாவட்ட மாநாட்டிற்கு தியாகி  என்.வி. நினைவகத்திலிருந்து நினைவுச் சுடரை  செந்தொண்டர்கள் ஏந்தி சிறப்பாக கொண்டு  செல்வது.  பூதலூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி  செய்ய வேண்டும். நவீன மருத்துவ வசதிகள்,  உபகரணங்கள், பிரேத பரிசோதனை கூடம்  அமைத்து தர வேண்டும். கடந்த ஆண்டு பரு வம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசால் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை பயனா ளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. மேலும், கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு அறிவித்தும் ஏதாவது காரணம் சொல்லி இழுத்தடிக்கும் நிலை உள்ளது. இவற்றை  உடனடியாக சரி செய்து குளறுபடியில்லாமல் விவசாயிகளுக்கு, நிவாரணம் மற்றும் இழப் பீட்டு தொகையை உடனே வழங்கிட வேண்டும். பூதலூர் தாலுகா பல கிராமங்களில் நடவு  செய்துள்ள விளைநிலங்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மேயும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளால் விவசாயிகள் பயிரை காக்க முடியாமல் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து நடவடிக்கை மேற் கொண்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் தொடர் விபத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம், டிச.8 - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய பிரதான  சாலையில் தொடர் விபத்துகள் நேரிடு வதை தடுத்திட வேண்டும். ஆம்புலன்சில் உயி ருக்கு போராடும் நிலையில் இருப்பவர் களைக் கூட உரிய நேரத்தில் மருத்துவமனை யில் அனுமதிக்க முடியாத நிலையில் சாலை  உள்ளது. இதனை உடனே சீர் செய்ய வேண்டும்.  இந்த பிரதான சாலையில் பேட்ச் ஒர்க் பார்ப்பதை நிறுத்தி விட்டு, முழுமையாக செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் கள் சங்கம்(சிஐடியு) சார்பில் பாபநாசம் அண்ணாசிலை அருகில் கொள்ளி சட்டி, பாடையுடன் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கே.சங்கர் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் பி.எம்.காதர் ஹீசைன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் வி.முரளிதரன், மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயகுமார் கண்டன உரையாற்றினர். முன்னதாக போராட்டத்தின் போது பாபநா சம் காவல் ஆய்வாளர் அழகம்மாள், தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ஸ்ரீ நித்திஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  உதவிப் பொறியாளர், ‘என்னால் இதில் முடிவெடுக்க முடியாது. கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய பிரதான சாலையை மாநில அரசு கேட்டுள்ளது. தரப் போகி றோம்” என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் பாபநாசம் தாசில்தாருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றனர். பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

;