districts

img

அகவிலைப்படி நிலுவைகளை வழங்க கோரி போக்குவரத்து ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் டிச. 27- நிலுவையிலுள்ள ஓய்வூதிய தொகையை வழங்க கேட்டு தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது கடந்த 75 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டை முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு கால பண பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை மாத துவக்கத்தில் உரியவருக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநிலம் தழுவிய இயக்கம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் பால் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர் ராஜ், நிர்வாகிகள் கிருஷ்ண தாஸ், குஞ்சன் பிள்ளை, சோபன் ராஜ், ராஜ மார்த்தாண்டம் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நவம்பர் 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும், மருத்துவபடி ரூ 100ஐ ரூ 300 ஆக உயர்த்த வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு இதுவரை வழங்காமல் உள்ள மருத்துவ படியை உடனடியாக வழங்க வேண்டும் .குடும்ப பாதுகாப்பு நிதி ரூ 50,000 வழங்க வேண்டும் ,ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிலுவைகள் தீர்வு செய்யபட  வேண்டும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்  உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு ரேவா தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்ப மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி ரேவா நிர்வாகிகள் வெங்கடாச்சலம் ,ராஜன் ,பெருமாள் ,பழனி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.