districts

திருநங்கைகள் குறைதீர் முகாம்

புதுக்கோட்டை, ஆக.4 -

     சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திரு நங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 35 திருநங்கையர்கள் கலந்து கொண்டு, மருத்துவ முகாம் நடத்த கோருதல், குடும்ப அட்டை மற்றும் வீட்டுமனைப் பட்டா தொடர்பாக 8 மனுக்களை மாவட்ட  ஆட்சியரிடம் வழங்கினர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவ டிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவல ருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.