districts

img

மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கடமலைக்குண்டு, மே 20- தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக  விட்டு விட்டு பெய்து வரும் மழை காரண மாக கடமலைக் குண்டு கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதி கரித்து வெள்ளம் போல பாய்ந்து செல்கி றது இந்நிலையில் ஞாயிறன்று தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.அருவிகள் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டுமென்று பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது இந்நிலையில் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்னும் மூன்று தினங்க ளுக்கு மேகமலை அருவிக்கு சுற்றுலாபய ணிகள் செல்ல வனத்துறை தடை விதித் துள்ளது வருகிற 21ஆம் தேதி வரை சுற்றுலா பய ணிகளுக்கு தடை என்றும் அதன் பிறகு தண்ணீர் வரத்து சீரானால் சுற்றுலா பயணி கள் அனுமதிக்கப்படுவதற்கு வாய்ப்பு என்  றும் தெரிவித்துள்ளனர் அருவிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத் திற்கு முன்பாகவே சோதனை சாவடியில் வனத்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அரு விக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வைத்து வருகின்றனர்.

;