districts

img

சனாதன சக்திகளை எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கருத்து

புதுக்கோட்டை, ஜூலை 3-

     தேச ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள சனாதன சக்திகளை எதிர்கொள்ள அறிவியல் வெளியீடுகள் அவசியம் என  தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்  றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறினார்.

    கவிஞர் எஸ்.இளங்கோ இல்ல திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதையொட்டி அவர் எழுதிய ‘தொலை நோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. நூலின் முதல்பிரதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட, கந்  தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பெற்றுக் கொண்டார்.  

    இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது:

    தமிழ்நாடு அரசு நூல கங்களை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரு கிறது. அதன் சாட்சியாக மது ரையில் கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் எழுந்துள்ளது. அரசு சார்பில் மாவட்டந்தோறும் புத்தகத்  திருவிழாக்கள் நடத்தப்பட்டு  வருகின்றன. புதுக்கோட்டை யில் நடைபெறவுள்ள 6 ஆவது புத்தகத் திருவிழா வை அனைவரும் இணைந்து சிறப்பாகக் கொண்டாடு வோம்.

    கவிஞர் எஸ்.இளங்கோ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான படைப்புகளை எழுதியும், உலகத் திரைப் படங்களை திரையிட்டும் வருவது வியக்கத்தக்க சாத னையாகும். இங்கே வெளி யிடப்பட்டுள்ள ‘தொலை நோக்கியால் பார்ப்பதும் மெய்’ என்ற அறிவியல் கட்  டுரை தமிழுக்கு மிக முக்கிய மான நூலாகும். நிறைய  உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே இது சாத்தியமா கும்.

    இயற்கையை, அறி வியல் தொழில்நுட்ப பார்  வையோடும் எதிர்காலத்தோ டும் சேர்த்து பார்க்கக்கூடிய கட்டுரைகளை இளங்கோ எழுதியுள்ளார். இன்றைக்கு சனாதன சக்திகள் நாட்டை பிற்போக்கு பாதையில் இழுத்துச் செல்கிற சூழ லில், அவற்றை எதிர் கொள்ள இதுபோன்ற அறி வியல் வெளியீடுகள் மிக வும் அவசியத் தேவையாக உள்ளது. ‘தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து’ என்ற அற்புதமான படைப்பையும்  இவர் தந்துள்ளார். இவர் எழு திய நூல்களை அரசு நூல கங்களில் கொண்டு செல்வ தற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மேனாள் சட்டப்பேரவை உறுப்பி னர் கவிச்சுடர் கவிதைப்பித் தன், கலைஞர் தமிழ்ச்சங்க  நிறுவனர் த.சந்திரசேகரன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், கவி ஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் ஜீவி உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நூலாசிரியர் எஸ்.இளங்கோ வரவேற்க, கி.ஜெயபாலன் நன்றி கூறினார்.  

   நிகழ்ச்சிகளை கவிஞர் ஸ்டாலின் சரவணன் தொகுத்து  வழங்கினார். தமுஎகச நிர்வா கிகள் பங்கேற்றனர்.