அறந்தாங்கி, ஜூன் 21-
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி சாலை மறி யல் போராட்டம் நடைபெற் றது.
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி வட்டம் நாகுடி ஊராட்சி அருணாச் சலபுரம் கிராமத்தில் தொட ர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் காத நிர்வாகத்தை கண்டித்து காலிக் குடங்களுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய மாதர் சங் கம் மற்றும் கிராம பொதுமக் கள் இணைந்து சாலை மறி யல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலை வர் ஆர்.ராதா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.யோக ராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் தென்றல் கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் கே.தங்கராஜ், சிஐடியு ஒன் றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.கர்ணா, சிபிஎம் அறந் தாங்கி நகரச் செயலாளர் கணேசன், மாதர் சங்க ஒன்றி யச் செயலாளர் இந்திராணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ் ணன் மற்றும் அருணாச்சல புரம் கிராம மக்கள் பங்கேற் றனர்.
நாகுடி ஊராட்சி அரு ணாச்சலபுரம் கிராமத்திற்கு தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வழங்கி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அருணாச்சல புரம் உள்குடியிருப்பு சாலை களை செப்பனிட வேண்டும். நாகுடியிலிருந்து மணக்குடி செல்லும் ஆற்றங்கரை சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். கல் லணை கால்வாய் கோட்டத் தில் பழுதாகி உள்ள மதகு கள், பாலங்கள், வாய்க்கால் களை உடனடியாக செப்ப னிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் ஆழ் துளை கிணறு அமைத்து குடி நீர் வழங்க ஏற்பாடு செய்வ தாகவும், சாலைகளை செப்ப னிடுவதாகவும் உறுதிய ளித்ததால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட் டது.