districts

img

திருப்பூண்டி பள்ளிக் கட்டிடத்தை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், ஜூலை 12-

      நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள் ளிக்கு புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடத்தை  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்  பினர் நாகைமாலி திறந்து வைத்தார்.  

    கீழ்வேளூர் சட்டமன்றத் திற்கு உட்பட்ட திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என கோரிக்கை எழுந்ததையடுத்து, சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி நேரடியாக ஆய்வு செய்  தார்.  

    பின்னர் இப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டுவதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27.87 லட்  சம் ஒதுக்கிய பின், இக்கட்டி டம் கட்டப்பட்டது. மாண வர்களுக்கான இந்த இரண்டு வகுப்பறை கட்டிடங்களும் செவ்வாயன்று திறந்து வைக்  கப்பட்டன.

     இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேக ரன், பள்ளித் தலைமை ஆசி ரியர் ஆறு.துரைகண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல்அஜீஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஒ.எஸ்.இப்ராஹிம், திருப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சத்யராஜ்  உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.