districts

விருதுநகர் சந்தை பட்டாணி பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு விலை உயர்வு

விருதுநகர், நவ.14- விருதுநகர் சந்தையில் பாமா யில், பட்டாணி பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை சற்று குறைந்துள்ளது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: பாமாயில் விலை 15 கிலோ கடந்த வாரம் ரூ.1340 க்கு விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.10 வரை  உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, டின் ஒன்று ரூ.1350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு (புதுஸ் நாடு  வகை) 100 கிலோ கடந்த வாரம்  ரூ.12500க்கு விற்பனை செய்யப்பட்  டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.500 வரை குறைந்தது.  எனவே, மூட்டை ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. இதேபோல் துவரம் பருப்பு நயம் (லயன் வகை) 100 கிலோ ரூ.16400க்கு விற்பனையானது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்துள்ளது. எனவே, ரூ.16,200க்கு விற்கப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,200 என விற்பனையானது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 200 வரை உயர்த்தப்பட்டு, தற்போது  ரூ.10,400 க்கு விற்பனையாகிறது. இதேபோல் உளுந்து (லையன்) 100 கிலோ கடந்த  வாரம் ரூ.10,900க்கு விற்கப்பட் டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்துள்  ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ. 11ஆயிரத்திற்கு விற்பனை செய் யப்படுகிறது.

பட்டாணி பருப்பு (இந்தியா) 100 கிலோ கடந்த வாரம் ரூ.6300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த  வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு  ரூ.800 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குவிண்டால் ஒன்று ரூ.7100-க்கு விற்கப்படு கிறது. வெள்ளை பட்டாணி பருப்பு  கடந்த வாரம் 100 கிலோ ரூ.6300க்கு  விற்கப்பட்ட நிலையில் திடீரென குவிண்டால் ஒன்றுக்கு ரூ.350 உயர்த்தப்பட்டு, மூட்டை ஒன்று ரூ.6350க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த  வாரம் ரூ.10,300க்கு விற்கப்பட்ட நிலையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50  உயர்ந்து தற்போது, ரூ.10,350க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ  கடந்த வாரம் ரூ.6200க்கு விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.300 குறைந்  துள்ளது. எனவே, மூட்டை ஒன்று  ரூ.5900க்கு விற்பனை செய்யப்படு கிறது. துவரம் பருப்பைத் தவிர பிற அனைத்து வகை பருப்புகளின் விலையும் உயர்ந்துள்ளது. இத னால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தி  கணிசமாக அதிகரித்த போதிலும், விலையானது கட்டுக்குள் இல்லா மல், பெருமளவு உயர்த்தப்பட்டே வருகிறது.  எனவே, தமிழக அரசு, பருப்பு களின் விலையை கட்டுக்குள் வைத்  திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிற  அத்தியாவசிய உணவுப் பொருட்க ளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.