ஆரத்தியெடுத்து, மலர்மாலை, சால்வை அணிவித்தனர்
திண்டுக்கல், மார்ச் 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுமலை பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கிராமந்தோறும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. திங்களன்று பிற்பகல் 3 மணி அளவில் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுமலையில் அண்ணா நகரில் ஆர்.சச்சிதானந்தம் வாக்குச் சேகரித்தார். பின்னர் பழையூர், புதூர், அகஸ்தியபுரம், தென் மலை ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலைகள், சால்வைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறுமலைப் பகுதியில் வாக்குச் சேகரிப்பின் போது, உணவு பாதுகாப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாவட்டக் கவுன்சிலர் விஜயன், திண்டுக்கல் ஒன்றிய சேர்மன் ராஜா, திமுக ஒன்றியச் செயலாளர் வெள்ளிமலை ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் என்.பெருமாள், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் சரத்குமார், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன், ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
ஆத்தூர், நிலவை சட்டமன்ற தொகுதிகளில் ஆர்.சச்சிதானந்தம் இன்று வாக்கு சேகரிப்பு
திண்டுக்கல், மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந் தியா’ கூட்டணி சார்பில் திண்டுக் கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம் செவ்வாயன்று ஆத் தூர், நிலக்கோட்டை தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். காலை 7 மணிக்கு ஆத்தூர் சட்டமன்ற தொகுதியான பிள்ளை யார் நத்தத்தில் பிரச்சாரத்தை துவக்குகிறார். அதன் பிறகு ஆல மரத்துப்பட்டி, பஞ்சம்பட்டி, ஆரிய நல்லூர், கலிக்கம்பட்டி, செட்டிய பட்டி, வலையபட்டி, அண்ணாநகர் சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, சாதிக்கவுண்டன்பட்டி, ரெங்கசாமி புரம், அமலி நகர் ஆகிய கிராமங்க ளில் வாக்கு சேகரிக்கிறார். மாலை 3 மணி அளவில் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி யான பள்ளபட்டியில் வாக்கு சேக ரிப்பு பிரச்சாரத்தை துவங்குகிறார். அதன் பிறகு கல்லடிபட்டி, ராமராஜ புரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, முத்துலாபுரம், அணைப்பட்டி, மேட்டுப்பட்டி, குல்லிசெட்டிபட்டி, குண்டலபட்டி, நிலக்கோட்டை எம்.டி.சி.சி. வங்கி அருகிலும், நிலக்கோட்டை சேர்மன் பஜார் பகுதிகளிலும் வாக்குச் சேகரித்து பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.