districts

img

புதுக்கோட்டையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

புதுக்கோட்டை, ஜூலை 10-

      புதுக்கோட்டை மாவட் டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தெரிவித்திருப்பதாவது:

      ஜூலை 1 முதல் 10 ஆம்  தேதிவரை தீக் கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தி லும் தீவிரமாக நடைபெற றது. ஒவ்வொரு இடைக் கமிட்டிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சந்தா சேர்ப்புக்கான குழு  அமைக்கப்பட்டது. ஒன்றி ரண்டு கமிட்டிகளைத் தவிர  இதர அனைத்துக் கமிட்டி களும் இலக்கைத் தாண்டி  சந்தாக்களைச் சேர்த்துள் ளன.இலக்கை முடிக்காத  கமிட்டிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் இலக்கை முடித்துவிடும் நிலையில் உள்ளன” என்றார்.  

எம்.சின்னதுரை எம்எல்ஏ

    திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற சந்தா சேர்ப்பு இயக்  கத்தில் மாநிலக்குழு உறுப்பி னர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்றார். அவருடன் மாவட்ட செயற்குழு உறுப்  பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழ கன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், நகரச் செய லாளர் ஏ.ஆர்.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆலங்குடி பேரூராட்சிக்குள் மட்டும் 50 தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.